Published : 10 Jul 2019 08:36 AM
Last Updated : 10 Jul 2019 08:36 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்தேறும்.

ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். அரசு வகையில் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

மிதுனம்: வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். கலைப்பொருட்கள் சேரும்.

கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும்.

சிம்மம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி: துடிப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

துலாம்: வேலைச் சுமை அதிகரிக்கும். சற்று பதற்றத்துடன் காணப்படுவீர்கள். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேச வேண்டாம். யாரை நம்புவது என்கிற குழப்பத்துக்கு ஆளாவீர்கள்.

விருச்சிகம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் எதிர்பாராத மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.

தனுசு: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

மகரம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

கும்பம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் விலகும். தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புண்ணியத் தலங்கள் சென்று வருவீர்கள்.

மீனம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x