

ஆனி 24, ஜூலை 9, செவ்வாய்க்கிழமை. மதுரை, திருப்பரங்குன்றம் தலங்களில் ஊஞ்சல் உத்ஸவம். சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் திருவீதியுலா.
ஆனி 25, ஜூலை 10, புதன்கிழமை. உபேந்திர நவமி. திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகன சேவை. திருவள்ளூர் சுதர்சன ஜயந்தி.
ஆனி 26, ஜூலை 11, வியாழக்கிழமை. ஸ்ரீபூமிநாத சுவாமி தெப்போத்ஸவம். கோதண்டசுவாமி ரதோத்ஸவம். திருச்செந்தூர் ஆலய வருஷாபிஷேகம். காஞ்சி தேவநாத சுவாமி ஆனி கருடசேவை.
ஆனி 27, ஜூலை 12, வெள்ளிக்கிழமை. ஸ்மார்த்த ஏகாதசி. கோ பத்ம விரதம் ஆரம்பம். மதுரை, திருப்பரங்குன்றம் தலங்களில் ஊஞ்சல் உத்ஸவம்.
ஆனி 28, ஜூலை 13, சனிக்கிழமை. வைஷ்ணவ ஏகாதசி. ஸ்ரீவாசுதேவ துவாதசி. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை. வேளூர் வைத்தியநாத சுவாமி, ஆச்சாள்புரம் ஸ்ரீசிவலோக தியாகராஜ சுவாமி ஸம்வத்ஸராபிஷேகம். சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்.
ஆனி 29, ஜூலை 14, ஞாயிற்றுக்கிழமை. சுக்ல பட்ச மகா பிரதோஷம். பழநி ஜேஷ்டாபிஷேகம். ஸ்ரீரங்கம் ஜேஷ்டாபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் ரதோத்ஸவம்.
ஆனி 30, ஜூலை 15, திங்கட்கிழமை. அருணகிரியார் குருபூஜை.திரு ஆவினன்குடி அன்னாபிஷேகம். காரைக்கால் மாங்கனித் திருவிழா.
ஆனி 31, ஜூலை 16, செவ்வாய்க்கிழமை. பெளர்ணமி. சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம். வியாஸ பூஜை. பழநி பெரிய ஆவுடையார் கோயில் அன்னாபிஷேகம். சந்திரகிரகணம்.