

துலாம் ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசிநாதன் சஞ்சாரத்தாலும், தனஸ்தானத்தில் குருவாலும் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். மேலிடத்திலிருந்து பாராட்டு கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
பண உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுபிட்சமும் ஆனந்தமும் நிலவும். குடும்பத்தில் திருமண வயதில் உள்ளவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். அரசியல்வாதிகளுக்கு, சுமுகமாக அனைவரிடமும் பழகுவீர்கள்.
கலைத் துறையினருக்கு, வீரநடை போட்டு வெற்றியை ருசிப்பீர்கள். ஏழைக் கலைஞர்களுக்கு உதவுவீர்கள். பெண்களுக்கு, சின்ன சின்ன உதவிகள் தாராளமாகக் கிடைக்கப் பெறுவீர்கள். அத்தியாவசிய வசதிகளுக்குக் குறை இருக்காது. மாணவர்களுக்கு, படிப்பில் கவனக் குறைவு ஏற்படும். கனவுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
எண்கள்: 3, 6
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும். மனக்கவலை தீரும்.
விருச்சிக ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் இருக்கும் குருவால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாகும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் தீரும்.
பிள்ளைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். உறவினரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண் டும். கலைத் துறையினருக்கு, தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடுதல் வேண்டாம். பெண்களுக்கு, முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங் களைச் செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். மாணவர்களுக்கு, கூடுதலாகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனம் தளராமல் செயல்பட்டால் வெற்றி உண்டு.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: இளஞ் சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: குரு பகவானை முல்லை மலரால் அர்ச்சனை செய்து வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும். மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியில் இருக்கும் கிரகங்களாலும், ராசியைப் பார்க்கும் கிரகங்களாலும் பணத்தேவை உண்டாகும். வியாபாரம் தொடர்பான கவலை ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனத்துடன் வேலைகளைச் செய்ய வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும்.
உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, அரசு விவகாரங்களில் தலையிடும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, சிறிய வாய்ப்புகள், நிகழ்ச்சிகளைக் கூடத் தட்டிக்கழிக்க வேண்டாம். உங்கள் எதிர்காலத்துக்கு உதவும். பெண்களுக்கு, மற்றவர்களுக்கு உதவுவதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களுக்கு, சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனத்தில் இடம்பிடிப்பீர்கள். கல்வியில் கவனம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், சனி
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு
எண்கள்: 1, 3, 9
பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். குடும்பக் கவலை தீரும்.
மகர ராசி வாசகர்களே
இந்த வாரம் ராசியாதிபதி விரயஸ்தானத்தில் இருப்பதால் எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுங்கள். பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில், தெளிவாகச் சிந்தித்து எதையும் வெற்றிகரமாகச் சாதிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும்.
அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தைச் சமாளிக்க வேண்டி வரலாம். அரசு விவகாரங்களில் சற்றுக் கவனத்துடன் செயல்படுவது அவசியம். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு, காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டுப் படிப்பது எதிர்காலத்துக்கு உதவும். திறமையுடன் காரியங்களைச் செய்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன்
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: நீலம், பச்சை
எண்கள்: 7, 9
பரிகாரம்: ஆஞ்சநேயரை வெண்ணெய் சாத்தி வழிபட தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கும்ப ராசி வாசகர்களே
இந்த வாரம் லாப ஸ்தானத்தில் கேது இருந்தாலும், ராசிநாதனுடன் இணைந்து இருப்பதால் விருப்பங்கள் கைகூடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சாமர்த்தியமாக விஷயங்களைக் கையாண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும்.
அரசியல்வாதிகளின் விருப்பங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கலைத் துறையினருக்கு, அனைவரிடமும் சுமுகமாக நடந்துகொள்வீர்கள். சிறிய நிகழ்ச்சிகள் மனத்துக்கு இதம், மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு, மனச்சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரவு கூடும். மாணவர்களுக்கு, விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீர்கள்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்
எண்கள்: 3, 9
பரிகாரம்: குருவை வணங்கி வர கவலை நீங்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
மீன ராசி வாசகர்களே
இந்த வாரம் சுகஸ்தானத்தில் இருக்கும் கிரகங்களால் பணவரவு அதிகரிக்கும். குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். தொலைதூரத் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் திடீர்ச் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம்.
குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன் பிள்ளைகளிடம் அன்பாகப் பேசிப் பழக வேண்டும். தாய்வழி உறவினர்களிடமிருந்து உதவி உண்டு. அரசியல்வாதிகளுக்கு, சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூடப் படபடப்பாவீர்கள்.
கலைத் துறையினருக்கு, விட்டுக் கொடுத்து காரியங்களைச் சாதிப்பீர்கள். பெண்களுக்கு, மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும்போதும், மின் சாதனங்களை இயக்கும்போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: மஞ்சள், சிவப்பு
எண்கள்: 1, 3
பரிகாரம்: முருகக் கடவுளை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.