நம் வழி விவேகானந்தர் வழி!

நம் வழி விவேகானந்தர் வழி!
Updated on
1 min read

சுவாமி விவேகானந்தர் நினைவு நாள் இன்று. இந்தநாளில், அவரின் பொன்மொழிகளையும் தத்துவங்களையும் புரிந்து உணருவோம். தெளிந்து ஏற்று அவர் வழிநடப்போம்.

இதோ... அவரின் மகத்தான அருளுரைகள்...

* உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.

* நீ எதை நினைக்கிறாயோ... அதுவாகவே ஆகிறாய். உன்னை வலிமையுடையவன் என்று நினைத்துக்கொள். உன்னை விட பலசாலி இந்த உலகில் எவரும் இல்லை.

* இந்த உலகம் மிகப்பிரமாண்டமான பயிற்சிக் கூடம். இவற்றில் இருந்து நம்மை வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே நாம் இங்கு வந்திருக்கிறோம்.

* உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கையை எட்டுவதற்கான விஷயங்கள். எனவே எப்போதும் உற்சாகமாக இருங்கள்.

* உனக்குத் தேவையான எல்லா வலிமையும் தேவையும் உனக்குள்ளேயே இருக்கின்றன. அமைதியான மனமும் தெளிந்த சிந்தனையும் இருந்தால், இவற்றை உன்னால் உணரமுடியும்.

* உன் மீது உனக்கு நம்பிக்கை வேண்டும். அப்படி உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையெனில், கடவுளே உன் எதிரில் வந்து நின்றாலும் கூட, அதனால் உனக்கு எந்தப் பயனும் நிகழப் போவதில்லை.

* எந்தச் செயலை செய்வதாக இருந்தாலும் அதில் உன் ஆன்மா, மனம், உடல், சிந்தனை அனைத்தையும் ஒப்படைத்துவிடு. முழு ஈடுபாட்டுடன் செய்யும் காரியங்களே வெற்றி அடையும். அவர்களே வெற்றியாளர்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in