Published : 11 Jul 2019 08:54 AM
Last Updated : 11 Jul 2019 08:54 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

மிதுனம்: எதிர்காலம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்பச் சூழ்நிலை அறிந்து பொறுப்புடன் செயல்படுவார்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கடகம்: எதிர்பார்த்த காரியங்களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பேச்சில் அனுபவ முதிர்ச்சி தெரியும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்: சிக்கலான, சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு திணறாதீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது.

விருச்சிகம்: குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.  கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு: குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களின் மனநிலையை உணர்ந்து பேசும் பக்குவம் உண்டாகும். காணாமல்போன முக்கிய ஆவணம் திரும்பக் கிடைக்கும்.

மகரம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். விலகி நின்ற சொந்தபந்தங்கள் விரும்பி வருவார்கள்.

கும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நட்பு வட்டம் விரிவடையும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டியது வரும். வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x