அத்திவரதர் தரிசன நேரம்: நீங்கள் உள்ளூரா? வெளியூரா?

அத்திவரதர் தரிசன நேரம்: நீங்கள் உள்ளூரா? வெளியூரா?
Updated on
1 min read

நாற்பது வருடங்களுக்கு ஒருமுறை தரிசனம் தரும் காஞ்சி அத்தி வரதர், நாளை ஜூலை 1ம் தேதி முதல் தரிசனம் தருகிறார். iஇதையொட்டி, உள்ளூர் பக்தர்களுக்கும் வெளியூர் பக்தர்களுக்கும் தனித்தனி நேரங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இதையொட்டி சில ஏற்பாடுகளும் வரையறைகளும் செய்யப்பட்டுள்ளன.

* உள்ளுர் மக்கள், தங்களுக்குக் குறிப்பிட்ட நேரம் மற்றும் தேதியில் உள்ளுர் சிறப்பு தரிசனம் செய்ய மட்டுமே ஆதார் கார்டு தேவை. இந்த தரிசனம் செய்ய உள்ளூர் மக்கள் தங்கள் வார்டு சேவை மையத்தில் பாஸ் வாங்க வேண்டும். இதற்கு, கட்டணம் ஏதும் இல்லை. 

* வெளியூர் மக்கள் 48 நாளும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச அல்லது 50ரூ சிறப்பு கட்டணம் மூலம் தரிசனம் செய்யலாம்! இதற்கு ஆதார் கார்டு தேவை இல்லை.

* 50 ரூபாய் தரிசன டிக்கெட், கோயில் மேற்கு கோபுரம் அருகில் கிடைக்கும்.  50 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட், ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியாது, நேரில் வந்து வாங்கியே தரிசனம் செய்யலாம்.

* உள்ளூர் மக்களும் இந்த இலவச அல்லது 50 ரூபாய் டிக்கெட் மூலம் தரிசனம் செய்யலாம். ஆனால் உள்ளூர் சிறப்பு தரிசன பாஸ் மூலம் ஒரு முறை மட்டுமே ஆதார் வைத்து தரிசனம் செய்ய முடியும்.

* 500 ரூபாய் தரிசனம் www.tnhrce.org என்ற இணைய முகவரி மூலம், வரும் 02.07.2019 முதல் பதிவு செய்யலாம். ஆனால் ஒரு நாளுக்கு அதில் 500 நபருக்கு மட்டுமே அனுமதி உண்டு. காலை 11 மணிக்கு - 250 பக்தர்கள், மாலை 3 மணிக்கு - 250 பக்தர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. 

* வெளியூர் மக்கள் பஸ் நிலையத்தில் இருந்து கோயில் வந்து சேர, திரும்பிச் செல்ல பல மினி பஸ், வேன், ஷேர் ஆட்டோ வசதிகள் உள்ளன. 

* கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, கார் பார்க்கிங் செய்ய தனி இடம் உண்டு. திருவீதி பள்ளம் - திருச்சோலை தெரு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! அங்கே மட்டுமே கார் நிறுத்த முடியும், கோயில் அருகில் அனுமதி இல்லை. 

* உள்ளுர் மக்களுக்கு தரிசனத் தேதிகள் : 

01.07.2019 முதல் 03.07.2019 வரை

12.07.2019 முதல் 24.07.2019 வரை

05.08.2019 முதல் 12.08.2019 வரை

16.08.2019 மற்றும்  17.08.2019

உள்ளுர் மக்களுக்கு தரிசன நேரம் : 

மாலை 5 முதல் இரவு 8 வரை

* வயதானவர்கள், ஊனமுற்றோர் தரிசனம் செய்ய சிறப்பு வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in