

மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு மூலம் அனுகூலம் உண்டாகும். புதியவர்களது நட்பு கிடைக்கும். அதனால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கும் கலைத்துறையினருக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். குடும்ப நலம் சீராகும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மக்கள் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடலாகாது. 22-ம் தேதி முதல் செவ்வாய் பத்தாம் இடத்திற்கு மாறி பலம் பெறுவதால் மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேர வழிபிறக்கும். எதிரிகள் பலவீனமாவார்கள். சட்டம், காவல், இராணுவத் துறையினர் சாதனைகள் செய்வார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 20, 21, 26 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.. .
நிறங்கள்: புகை நிறம், வான் நீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். பிறருக்கு உதவி புரிய முன்வருவீர்கள். எதிர்ப்புக்கள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். நல்ல நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போகவும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. வேகம் கூடாது. நிதானம் தேவை. 22-ம் தேதி முதல் செவ்வாய் எட்டாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்துக்கு மாறி, குருவின் பார்வையைப் பெறுவதால் சகோதர நலம் சீர்பெறும். சுபச் செலவுகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்டவற்றில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. மக்கள் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 20, 21, 26 (இரவு).
திசைகள்: வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம்..
எண்கள்: 7, 8.
பரிகாரம்: குரு, ராகு, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 6-ல் சூரியன், புதன் ஆகியோரும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் நலம் உண்டாகும். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் ஈடுபட்டுப் பயன் பெறுவீர்கள். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும்.அதனால் அனுகூலமும் உண்டாகும்.
எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 22-ம் தேதி முதல் செவ்வாய் எட்டாம் இடத்திற்கு மாறுவதால் ஆரோக்கியம் பாதிக்கும். சுக்கிர பலம் குறைந்திருப்பதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 20, 21.
திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, கிழக்கு, வடக்கு..
நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம், மஞ்சள், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 7.
பரிகாரம்: சுக்கிரனுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும். சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவதால் மன உற்சாகம் பெருகும். எதிர்ப்புக்கள் விலகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். கலைத்துறையினர் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 4-ல் சனி இருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் உண்டாகும். 22-ம் தேதி முதல் செவ்வாய் ஏழாம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது என்றாலும் குருவால் பார்க்கப்படுவதால் நலம் புரிவார். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். நல்லவர்களது தொடர்பு நலம் தரும். அரசாங்கத்தாரால் அளவோடு நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 20, 21, 26 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், பச்சை, இளநீலம், சிவப்பு...
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: சனிப்பிரீதி செய்து கொள்வது நல்லது. அங்கஹீனம் உள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 4-ல் புதனும் சுக்கிரனும் உலவுவதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புக்கள் விலகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்கள் சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும்.
புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி இருந்துவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்களது திறமை பளிச்சிடும். 22-ம் தேதி முதல் செவ்வாய் ஆறாம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். போட்டிப் பந்தயங்களிலும், விளையாட்டுகள், வழக்குகளிலும் வெற்றிகாணலாம். இயந்திரப்பணியாளர்களுக்கு செழிப்பான சூழ்நிலை உதயமாகும். சொத்துக்கள் சேரும். .
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 20, 21, 26 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை. , .
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகர் வழிபாடு அவசியமாகும். அன்னதானம் செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். உடன்பிறந்தவர்களால் பரஸ்பரம் அனுகூலம் உண்டாகும் . முயற்சி வீண்போகாது. தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு லாபம் தரும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும்.
கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பொன் நிறப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். 2-ல் சனியும், 4-ல் செவ்வாயும் 7-ல் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வீண்வம்பு வேண்டாம். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். 22-ம் தேதி முதல் செவ்வாய் ஐந்தாம் இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் குரு பார்ப்பதால் மக்கள் நலம் சீராகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,நவம்பர் 20, 21, 26.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6.
பரிகாரம்: ராகு, கேது, செவ்வாய், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது பார்வையில்லாதவர்களுக்கு உதவி செய்யவும்.