

இந்து மத புராணங்கள் முழுவதும் சில குறீயீடுகளை கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளது. ஆதாவது, முனிவர்களும் சித்தர்களும் சில விசயங்களை வெளிப்படையாக சொல்லாமல், சில குறியீடுகள் மூலமே குறிப்பிட்டுள்ளனர்.
மனிதன் புற உலகில் எதையெல்லாம் பார்த்து பயந்தானோ, அவற்றையே முனிவர்கள் மனிதனின் அக வாழ்வின் கொடிய விஷயங்களோடு தொடர்புபடுத்துகின்றனர். இதில் சாமுண்டி கீழ் இருக்கும் புலி, பரமசிவன் உடலில் உள்ள பாம்பு, மஹா விஷ்ணுவின் ஆதிசேச படுக்கை இவை சில உதாரணங்கள்.
இதில் புலி மற்றும் புலித் தோல் - கட்டுக்கடங்கா காமத்தையும், ஒரு தலை நாகம் - விஷத்தையும். ஐந்து தலை நாகம் - குண்டலினி மூலம் பெற்ற ஞானத்தையும் குறிக்கும்.
புலித்தோல் மீது அமர்வது, காமத்தை அடக்கி, தன்னுள் உறையும் கடவுளை காணும் தத்துவம் அடங்கியுள்ளது. சாமுண்டி கீழ் இருக்கும் புலி, மனிதனின் காமத்தை அழித்து நன்மை செய்பவள் என்று பொருள் கொள்ளலாம். மஹாவிஷ்ணுவின் ஆதிசேச நாகம், யோக நிஷ்டை மூலம் ஒருவர் குண்டலினி சக்தியை பெற்று ஞானம் பெறலாம் என்ற கருத்தை கூறுகிறது. இதுவே பரமசிவன் என்று வரும் போது. அவர் உடலில் பல இடங்களில் பாம்பு இருக்கும், ஆனால் அவை கட்டப்பட்டிருக்கும். இதன் பொருள், தலையில் உள்ள நாகம் அகங்காரம் என்னும் மனிதனின் நஞ்சையும், இடுப்பில் இருக்கும் நாகம் காமவெறி என்னும் நஞ்சையும், கழுத்தில் இருக்கும் நாகம் தவறான சொற்கள் என்னும் நஞ்சையும் கட்டி, நாம் யோகம் (கர்ம யோகம், பக்தி யோகம், ராஜயோகம் (குண்டலினி எழுப்புதல்), ஞான யோகம்) செய்தால், மனிதன் சித்தநிலை அடையலாம் என்ற சிவதத்துவம் அடங்கியுள்ளது.
சூரியன் மற்றும் சந்திரன் பாதைகளின் புறவெட்டு 'ராகு'. எனவே, இவரின் காரகத்துவங்கள் மனிதனின் புற ஒழுக்கங்களை அதாவது வெளியில் தெரியக்கூடிய ஒழுக்கங்களை பாதிக்கின்றன. இதையே, ராகு என்பது காமத்தின் (நஞ்சு) குறீயீடு. அதாவது பற்றுதல், பிடித்தல், விழுங்குதல் மற்றும் பின்தொடர்தல் (புலனாய்வு, சோம்பல், அலட்சியம், வஞ்சகம், சூது, பொய், பெரும் திருட்டு, ஏமாற்றுதல், நடிப்பு, ஆடம்பரம், போதை) என்னும் குணம் கொண்டது. அதனால் தான் இவரை கட்டுப்படுத்தும் அதிபதியாய் தேவி சாமுண்டி (அ) துர்கா (துர் = கெட்ட சக்தியிடம் + கா = காத்தல்) துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பாற்றுபவள் என்று பொருள்.
(மேலும் ஆராய்வோம்)