Published : 29 Jun 2017 10:43 am

Updated : 06 Jul 2017 12:21 pm

 

Published : 29 Jun 2017 10:43 AM
Last Updated : 06 Jul 2017 12:21 PM

வார ராசிபலன் 29-6-2017 முதல் 5-7-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

29-6-2017-5-7-2017

துலாம்:

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும், 10- புதனும் 11-ல் ராகுவும், உலவுவது நல்லது. எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கணிதம், எழுத்து, விஞ்ஞானம், பத்திரிகை போன்ற இனங்கள் ஆக்கம் தரும். ஜலப்பொருட்களால் லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள் கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழிலை மேம்படுத்தச் செலவு செய்வீர்கள். தொல் பொருட்கள், லாபம் தரும். 12-ல் குருவும் 5-ல் கேதுவும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மறதி உண்டாகும். பெரியவர்கள், சாதுக்கள் ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அலுவலகப் பணியாளர்ட்கள் பொறுப்புடன் கடமையாற்றிவருவது அவசியமாகும் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்:ஜூலை 3, 5.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு., தென்கிழக்கு. .

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை, இளநீலம்.

எண்கள்: 4, 5, 6. .

பரிகாரம்: குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். .விருச்சிகம்:

உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். பயணத்தின் மூலம் அனுகூலம் ஏறபடும். புதியவர்களின் சந்திப்பும் அதனால் நன்மையும் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்களால் ஆதாயம் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். மக்களால் நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வார முன்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். அதிகம் உழைக்க வேண்டிவரும். 8-ல் செவ்வாயும் சூரியனும் இருப்பதாலும், ஜன்ம ராசியில் சனி உலவுவதாலும் உடல் நலனில் கவனம் தேவை. சிறு விபத்துக்கு ஆளாக் நேரலாம். எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. யோசித்து ஈடுபடவும். எரிபொருட்கள், மின்சாரம், வெடிப்பொருட்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவறைப் பயன்படுத்தும் போது பாதுகாப்புத் தேவை. விளையாட்டு, விநோதங்களின்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு. .

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4.

பரிகாரம்: ஆஞ்சநேயரையும் முருகனையும் வழிபடவும்.

தனுசு:

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களிருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் அக்தி பிறக்கும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். குடும்ப நலம் சிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். சாதுக்கள் தரிசனம் கிடைக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். எழுத்தளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகரிக்கும். 6-ல் சுக்கிரனும் 78-ல் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்குப் பிரச்னைகள் சூழும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. பொருளாதார நிலை ஏற்றம்-இறக்கமாகவே காணப்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழிலாளர்களும் உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் கடமையாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3. . .

திசைகள்: வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.மகரம்:

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6--ல் சூரியனும் செவ்வாயும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும் நேரமிது. திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். பண நடமாட்டம் திருப்தி தரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். மக்களால் பெற்றோருக்கும், பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அரசியல், நிர்வாகம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தெய்வ தரிசனம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்து வரும் தொழிலில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களும், தொழிலாளர்களும் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உயர் பதவிகள் கிடைக்கும். நல்ல இடத்துக்கு மாற்றம் உண்டாகும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 3, 5.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை.

எண்கள்: 1, 3, 6, 8, 9.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. துர்கை அம்மனை வழிபடவும்.கும்பம்:

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும் நிலபுலன்கள் சேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும் சமுதால நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். 5-ல் சூரியனும் செவ்வாயும் 8-ல் குருவும் உலவுவதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் தடைப்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். புதியவர்களிடம் விழிப்புடன் இருப்பது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 3, 5. .

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு. .

நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6, 8.

பரிகாரம்: ராகு, கேது, குரு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.மீனம்:

உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நல்லவர்களின் நட்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். பண வரவு திருப்தி தரும். கலைஞானம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதியஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். வாரப் பின்பகுதியில் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீண் அலைச்சல் கூடாது. 4-ல் சூரியனும், செவ்வாயும் உலவுவதாலும், 9-ல் சனி இருப்பதாலும் பெற்றோர் நலம் கவனைக்கப்பட வேண்டிவரும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 5.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்

எண்கள்: , 3, 4,, 6.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்யஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

ராசிபலன்இந்து ராசிபலன்வார ராசிபலன்ராசி பலன்சந்திரசேகரபாரதிஜோதிடம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author