

கோபத்திற்குப் பெயர் பெற்ற துர்வாச முனிவர் ஸ்ரீசாந்தி துர்கா தேவியை வணங்கி தனது கோபத்தைக் கைவிட்டதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஸ்ரீ சாந்தி துர்க்கை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் கோயிலில் குடிகொண்டு அருள்பாலிக்கிறாள். இந்த அம்பாளை வழிபடுவதால், பக்தர்களின் வாழ்வில் ஏற்படும் பல வித பிரச்சினைகள் தீருவதாகக் கருதப்படுகிறது.
உலக மக்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய அத்தியாவசிய தேவைகள் தீர சாந்தி துர்க்கைக்கு தற்போது ஹோமம் நடத்தப்படுகிறது. மழைப்பொழிவு, தானிய விருத்தி, தேச ஒற்றுமை ஆகிய பலன்களுக்காகவும் செய்யப்படுகிறது.
இந்நிகழ்ச்சி 20.06.17 செவ்வாய்கிழமையன்று தொடங்கி 05.10.17 வியாழக்கிழமைவரை 108 நாட்களுக்கு சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் சங்கர மடத்தில் நடைபெற்று வருகிறது. இப்பூஜையில் சங்கர மட பீடாதிபதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.