Published : 19 Feb 2015 12:42 PM
Last Updated : 19 Feb 2015 12:42 PM

வார ராசிபலன் 19-2-2015 முதல் 25-2-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 10-ல் புதனும் 11-ல் சூரியனும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். அரசு மூலம் எதிர்பார்த்திருந்த காரியங்கள் வார முன்பகுதியில் ஈடேறும். புதியவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

வியாபார முன்னேற்றத் திட்டங்கள் ஈடேறும். பெற்றோரால் அனுகூலம் ஏற்படும். வார நடுப்பகுதியில் செலவுகள் சற்று கூடும். சிக்கன நடவடிக்கை தேவை. இடமாற்றம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் புதிய பொருட்சேர்க்கை நிகழும்.

நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். 8-ல் சனியும், 12-ல் செவ்வாய், கேது ஆகியோரும் உலவுவதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடலாகாது. வேலையாட்களால் சங்கடம் உண்டாகும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 23, 25.

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம்.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: முருகனையும் பிள்ளையாரையும் வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே:

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 10-ல் சூரியனும் 11-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். போட்டியாளர்களும் பொறாமைக்காரர்களும் உங்களை விட்டு விலகுவார்கள். அரசு உதவி கிடைக்கும்.

புதிய பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும். நிர்வாகத்திறமை கூடும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகளின் சேர்க்கை நிகழும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும்.

வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று கூடும். சிக்கனத்தைக் கையாள்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். பிதுரார்ஜித சொத்துகளைப் பெற வாய்ப்பு உண்டாகும். மக்களின் நடத்தையில் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் வார முன்பகுதி சிறப்பானதாக அமையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 21, 22. 25.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 7, 9.

பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் கூட்டும்.

மிதுன ராசி வாசகர்களே:

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 8-ல் புதனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும்.

துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். சுறுசுறுப்பாக இயங்குவீர்கள். எதிரிகளின் கரம் வலுக்குறையும். வழக்கில் சாதகமான போக்கு நிலவிவரும். வெளிவட்டாரப் பழக்கம் நலம் தரும். வியாபாரம் பெருகும்.உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

பேச்சாற்றல் பளிச்சிடும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மத போதகர்கள், மேடைப் பேச்சாளர்கள் ஆகியோரின் நிலை உயரும். பண வரவு திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 23.

திசைகள்: வடமேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7, 8, 9.

பரிகாரம்: ராகுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. துர்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.

கடக ராசி வாசகர்களே:

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் முதல் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம் என்பதால் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சூரியன் 8-ல் இருப்பதால் உஷ்ணாதிக்கம் கூடும். தலை, கண், இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.

அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. 21-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். சுப காரியங்களில் பங்கு கொண்டு மனம் மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். குரு வக்கிரமாக இருப்பதாலும் 5-ல் சனி உலவுவதாலும் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். தொழில் அதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 23.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், கறுப்பு, இளநீலம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவவும்.

சிம்ம ராசி வாசகர்களே:

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும், 8-ல் சுக்கிரனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் அறிவாற்றல் பளிச்சிடும். மாணவர்களது நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.

கலைஞர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். பெண்களுக்கு அளவோடு நன்மைகள் உண்டாகும். பண வரவு திருப்தி தரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 8-ல் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

ஜலம் நிறைந்துள்ள, வழுக்கும் இடங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. வாரக் கடைசியில் புனிதமான காரியங்களில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 23, 25.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: முருகனையும், பிள்ளையாரையும் வழிபடுவது நல்லது. நாகர் வழிபாடு செய்யவும்.

கன்னி ராசி வாசகர்களே:

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் சூரியனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு உதவுவார்கள். 7-ல் செவ்வாய், கேது, சுக்கிரன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகளும் சண்டை, சச்சரவுகளும் ஏற்படும். சகிப்புத் தன்மை தேவை. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது.

பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். 5-ல் புதன் இருப்பது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் குரு பார்ப்பதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். மாணவர்களது திறமை வெளிப்படும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,பிப்ரவரி 21, 22.

திசைகள்: வடக்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 8.

பரிகாரம்: செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x