Published : 15 Mar 2014 01:15 PM
Last Updated : 15 Mar 2014 01:15 PM

வார ராசி பலன் | 13-03-14 முதல் 19-03-14 வரை - (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம்

உங்கள் ராசிக்கு 11இல் சூரியனும் புதனும் உலவுவதாலும் சனி வக்கிரமாக இருப்பதாலும் குருவின் பார்வை 7, 9, 11ஆம் இடங்களுக்குப் பதிவதாலும் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கும் அரசியல்வாதிகளுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் 14ஆம் தேதிக்குள் வாய்ப்பு கூடிவரும்.

புதிய பதவி, பட்டங்களும் கிடைக்கும். கடல் வாணிபம் லாபம் தரும். தாயாராலும் தாய்வழி உறவினர்களாலும் நலம் பல உண்டாகும். 15ஆம் தேதி முதல் சூரியன் 12ஆமிடம் மாறுவதாலும் குரு 3இல் இருப்பதாலும் மக்கள் நலனில் கவனம் தேவை. அரசு சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16 (பிற்பகல்), 19.

திசைகள்: கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, பொன் நிறம், சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 2, 5.

பரிகாரம்: ராகு, கேதுக்களுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும்.



ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2இல் குருவும், 6இல் ராகுவும், 9இல் சுக்கிரனும் 10இல் சூரியனும் புதனும் உலவுவது சிறப்பாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள், மாணவர்களுக்குச் சிறப்பான சூழ்நிலை. 5இல் செவ்வாயும் 6இல் சனியும் வக்கிரமாக உலவுவதால் மக்களால் இடர்ப்பாடுகள் உண்டாகும். 15 முதல் சூரியன் 11ஆமிடம் மாறுவதால் நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16 (பிற்பகல்), 18, 19.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், நீலம், வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.



மிதுனம்

சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமை கூடும். கடல் வாணிபத்தில் வளர்ச்சி காணலாம். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரப் பெறுவார்கள்.

கலைத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். அலைச்சல் அதிகரிக்கும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். உடல்நலனில் கவனம் தேவை. 15 முதல் சூரியன் 10ஆமிடம் மாறுவதால் அரசாங்கத்தாரால் அனுகூலம். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்குக் கிடைக்கும். தந்தையால் அனுகூலம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16 (பிற்பகல்), 19.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: துர்கையையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.



கடகம்

4இல் வக்கிர சனியும், 8இல் புதனும், 10இல் கேதுவும் உலவுவதால் உங்கள் திறமைக்குரிய பயன் கிடைக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலம். ஆன்மிகவாதிகளும் அறப்பணியாளர்களும் மதிப்பு உயரப் பெறுவார்கள். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம். 4இல் ராகுவும், 7இல் சுக்கிரனும் 8இல் சூரியனும் உலவுவதால் உடல் நலனில் கவனம் தேவை.

வாழ்க்கைத் துணை நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். 15 முதல் சூரியன் 9ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் தர்ம சிந்தனை வளரும். குரு 12இல் இருப்பதால் சுப காரியங்களுக்காகவும், மக்கள் முன்னேற்றத்துக்காகவும் செலவழிக்க வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 18, 19.

திசைகள்: வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், சிவப்பு.

எண்கள்: 5, 7.

பரிகாரம்: பராசக்தியை வழிபடவும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானம் கொடுக்கவும். சூரிய வழிபாடு அவசியமாகும்,.



சிம்மம்

உங்கள் ராசிக்கு 3இல் ராகுவும், 11இல் குருவும் உலவுவது சிறப்பாகும். வசதிகள் பெருகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தால் நலம் ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்கள் லாபம் தரும். மக்களால் மன மகிழ்ச்சி பெருகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். உடல்நலம் சீராக இருந்துவரும்.

2இல் வக்கிர செவ்வாயும், 3இல் வக்கிர சனியும் 6இல் சுக்கிரனும் 7இல் சூரியனும் இருப்பதால் கணவன் - மனைவி கருத்து வேற்றுமை உண்டாகும். 15 முதல் சூரியன் 8ஆமிடம் மாறுவதால் உடல்நலனில் கவனம் தேவை. தந்தையாலும், அரசாங்கத்தாராலும் சங்கடம் உண்டாகும். எதிலும் பதற்றம் கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16 (பிற்பகல்), 18, 19.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, புகை நிறம்.

எண்கள்: 3, 4.

பரிகாரம்: ஏழைப் பெண்களுக்கு உதவவும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.



கன்னி

5இல் சுக்கிரனும் 6இல் சூரியனும் புதனும் உலவுவதால் மன மகிழ்ச்சி கூடும். கலைஞர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். மாதர்கள் நிலை உயரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற துறைகள் ஆக்கம் தரும். அரசு உதவி கிடைக்கும்.

உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெறுவீர்கள். செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பதற்றம் கூடாது. உடலில் காயம்பட நேரலாம். கண், வாய், பல், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 15 முதல் சூரியன் 7ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத் துணைவருக்கும் உங்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சகிப்புத் தன்மை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18, 19.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 1, 5, 6.

பரிகாரம்: செவ்வாய், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களை வழிபடவும். வேகத்தைக் குறைத்துக்கொள்ளவும். விவேகம் அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x