Published : 18 Aug 2016 11:38 AM
Last Updated : 18 Aug 2016 11:38 AM

ஆவணி மாத நக்‌ஷத்திர ராசிபலன்கள்: ‘மகம்’ முதல் ’கேட்டை’ வரை

மகம்:

தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடும் மக நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.

பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

+: முயற்சிகள் வெற்றியைத் தரும்

-: பணிகளில் தாமதம் ஏற்படும்.

பரிகாரம்: மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

***********************************************************************************************

பூரம்:

ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்கும் பூர நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.

பெண்கள் நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

+: மனோ தைரியம் அதிகரிக்கும்.

-: வேலை தொடர்பான அலைச்சல் இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மியை தியானம் செய்து வணங்க குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

***********************************************************************************************

உத்திரம்:

புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறும் உத்திர நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். வயிறு கோளாறு ஏற்படும். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்கள் வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

+: சக மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

-: குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.

பரிகாரம்: திங்கட்கிழமையில் நவக்கிரக சூரியனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ பயம் விலகும்.

***********************************************************************************************

ஹஸ்தம்:

எல்லோரிடமும் அனுசரித்து பேசும் குணமுடைய ஹஸ்த நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.

தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

+: காரிய வெற்றி உண்டாகும்.

-: பயணத்தின் போது கவனம் தேவை.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்கிவர செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும்.

***********************************************************************************************

சித்திரை:

நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படும் சித்திரை நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.

பெண்களுக்கு மனோதைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

+: மற்றவர்களிடம் அன்பாக இருப்பீர்கள்.

-: உடல் சோர்வு வரலாம்.

பரிகாரம்: கருமாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

***********************************************************************************************

ஸ்வாதி:

உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதே குறிக்கோளாக உடைய ஸ்வாதி நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள்.

குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.

பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

+: மனக்கவலை நீங்கும்.

-: வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். கவலைகள் நீங்கும். மனோ தைரியம் கூடும்.

***********************************************************************************************

விசாகம்:

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய விசாக நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு. மனமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். எனினும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம் உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

+: விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

-: மன அமைதி குறையும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.

***********************************************************************************************

அனுஷம்:

தர்மகுணமும், இரக்க சிந்தனையும் உடைய அனுஷ நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரத்து திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.

+: உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

-: செலவு கூடும்.

பரிகாரம்: ஸ்ரீஐயப்பனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும்.

***********************************************************************************************

கேட்டை:

ஆடை ஆபரணத்தையும் அலங்காரத் தையும் விரும்பும் கேட்டை நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.

பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

+: தொழில் சாதகமாக இருக்கும்.

-: எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x