Published : 27 Feb 2014 01:41 PM
Last Updated : 27 Feb 2014 01:41 PM

வார ராசி பலன் | 27-2-14 முதல் 05-03-14 வரை - (துலாம் முதல் மீனம் வரை)

துலாம்

உங்கள் ராசிநாதன் சுக்கிரனும் புதனும் 4-ஆமிடத்தில் உலவுவது சிறப்பாகும். சுக்கிரன் சனியின் வீட்டிலும், சனி-சுக்கிரனின் வீட்டிலும் பரிவர்த்தனையாக இருக்கிறார்கள். இதனால் சுகம் கூடும். மன மகிழ்ச்சி பெருகும் நல்லவர்களின் தொடர்பால் நலம் பல பெறுவீர்கள். புது வீடு யோகமும் உண்டாகும்.

மாணவர்களது திறமை பளிச்சிடும். 5இல் சூரியனும், 9இல் வக்கிர குருவும் இருப்பதால் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். 12 இல் செவ்வாய் இருப்பதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் கவனம் தேவைப்படும். மார்ச் 1ஆம் தேதி முதல் சனியும் செவ்வாயும் வக்கிரம் பெறுவதால் உடல் நலனில் கவனம் தேவைப்படும். பண வரவு சற்று கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, மார்ச் 3, 5.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: செவ்வாய்க்கும் முருகருக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடவும். இளைஞர்களுக்கு உதவி செய்யவும்.

விருச்சகம்

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11 ஆமிடத்தில் உலவுவது விசேடமாகும். சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதாலும் குரு 8 இல் வக்கிரமாக உலவுவதாலும் செயலில் வேகம் கூடும். மனஉறுதி அதிகமாகும்.

புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதன் 3 இல் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. சனியும் ராகுவும் 12இல் இருப்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. 1ஆம் தேதி முதல் செவ்வாயும் சனியும் வக்கிர நிலை பெறுவது சிறப்பாகும். விரயச் சனியினால் விளைந்துவந்த சங்கடங்கள் குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, மார்ச் 3, 5.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு.

எண்கள்: 3, 6, 7, 9.

பரிகாரம்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். வெள்ளிக்கிழமை களில் துர்கைக்கு பசு நெய் தீபமேற்றி வழிபடவும்.

தனுசு

உங்கள் ராசிக்கு 2இல் புதனும் சுக்கிரனும் 3இல் சூரியனும், 10இல் செவ்வாயும், 11இல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். வியாபாரம் பெருகும். எழுத்து, கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள்.

வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் கூடப் பெறுவார்கள். 5 இல் கேதுவும், 7 இல் வக்கிர குருவும் உலவுவதால் மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 1ஆம் தேதி முதல் சனியும் செவ்வாயும் வக்கிரம் பெறுவதால் நலமே உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, 28, மார்ச் 3.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை, ரோஸ்.

எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.

பரிகாரம்: கணபதி ஹோமம் செய்வது நல்லது. குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

மகரம்

உங்கள் ராசியில் சுக்கிரனும் 10இல் சனி, ராகு ஆகியோரும் 6இல் வக்கிர குருவும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

பண நடமாட்டம் அதிகமாகும். நல்ல தகவல் வந்து சேரும். தர்ம சிந்தனை வளரும். 2இல் சூரியனும் 4இல் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் தேவை. 1ஆம் தேதி முதல் செவ்வாயும் சனியும் வக்கிரம் பெறுவதால் தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் மன அமைதி குறையும். நிலபுலங்கள் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, 28, மார்ச் 3.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, கறுப்பு.

எண்கள்: 3, 4, 6, 8.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம். பசுக்களுக்கு உணவளிக்கவும்.

கும்பம்

3இல் கேதுவும், 5இல் குருவும், 12இல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். சுப காரியங்களுக்காகவும், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும் செலவு செய்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளில்

ஈடுபாடு கூடும். தந்தை நலனுக்காகவும் செலவு செய்வீர்கள். புதன் 12இல் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். பொறியியல்துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது அவசியமாகும். 1ஆம் தேதி முதல்

செவ்வாயும் சனியும் வக்கிரம் பெறுவதால் தந்தையாலும் உடன்பிறந்தவர்களாலும் பிரச்னைகள் சூழும். நிதானமாக ஈடுபடுவது அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 3, 5.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், நீலம்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். ஏழை மாணவர்களுக்கு உதவவும். இளைஞர்கள் வேலை வாய்ப்புப் பெற உதவி செய்யவும்.

மீனம்

உங்கள் ராசிக்கு 11இல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். மன மகிழ்ச்சி கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி தொழில்புரிபவர்கள் லாபம் பெறுவார்கள். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு அவசியம் தேவை. புதியவர்களை நம்பி முக்கியமான பொறுப்புக்களையும் பணத்தையும் ஒப்படைக்க வேண்டாம். அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. இயந்திரம், எரிபொருள், இரும்பு, எஃகு, போக்குவரத்துச் சாதனங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது விழிப்பு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப். 27, மார்ச் 3, 5.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, ரோஸ், இளநீலம், வெண்மை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். குறுக்கு வழிகளில் சிந்தையைச் செலுத்த வேண்டாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x