Published : 31 Jul 2014 13:07 pm

Updated : 07 Jun 2017 18:27 pm

 

Published : 31 Jul 2014 01:07 PM
Last Updated : 07 Jun 2017 06:27 PM

வார ராசிபலன் 31-07-2014 முதல் 06-08-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

31-07-2014-06-08-2014

துலாம் ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். கலைஞர்களது நிலை உயரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவி வரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களின் நிலை உயரும். செவ்வாய், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லை.


எனவே வீண் செலவுகளைத் தவிர்க்கவும். தூக்கம் கெடும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தும்போதும் விளையாட்டு விநோதங்களில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு அவசியம் தேவை. வாரப் பின்பகுதியில் பணவரவு சற்று கூடும். குடும்ப நலம் சீராகும். பேச்சில் திறமை வெளிப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு

நிறங்கள்: மெரூன், பச்சை, வெண்மை, இளநீலம், ஆரஞ்சு

எண்கள்: 1, 5, 6, 7

பரிகாரம்: துர்கைக்கு நெய் விளக்கேற்றவும். முருகனுக்கு அர்ச்சனை செய்யவும்.



விருச்சிக ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரன், 9-ல் குரு, 11-ல் ராகு சஞ்சரிப்பது விசேஷமாகும். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். பிள்ளைகளாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், வங்கிப் பணியாளர்களின் நிலை உயரும்.

வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணம் சம்பந்தமான இனங்கள் லாபம் தரும். செவ்வாயும், சனியும் 12-ல் உலவுவதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். சகோதர நலனில் அக்கறை தேவை. சுரங்கப் பணியாளர்களுக்கும் தோட்டப் பணியாளர்களுக்கும் முன்னேற்றம் தடைப்படும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் இருக்கவும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு எச்சரிக்கை தேவை. கால், கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், இளநீலம்

எண்கள்: 3, 4, 6

பரிகாரம்: சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும். ஏழைகள், வயோதிகர்களுக்கு உதவவும்.



தனுசு ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதன்,10-ல் ராகு, 11-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பது சிறப்பு. பேச்சாற்றல் கூடும். வியாபாரத் திட்டங்கள் கைகூடும். பண வரவு அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் வளர்ச்சி அடையும். இயந்திரப்பணியாளர்களுக்கும் இஞ்சினீயர்களுக்கும் ஆதாயம் அதிகமாகும். தொழிலாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். எதிரிகளின் கரம் வலுக் குறையும். குடும்ப நலம் சீராகும்.

நல்ல வேலையாட்கள் அமைவார்கள். நிலபுலங்களால் லாபம் கிடைக்கும். கறுப்பு நிறப்பொருட்கள், கச்சாப் பொருட்கள், பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள் மூலம் ஆதாயம் பெறலாம். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இராது. தந்தை நலனில் அக்கறை தேவை. அரசியல், நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)

திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடக்கு

நிறங்கள்: நீலம், சிவப்பு, புகை நிறம், பச்சை

எண்கள்: 4, 5, 8, 9

பரிகாரம்: சூரியனை வழிபடவும். கெளரி பூஜை செய்யவும். ஏழைப் பெண்களுக்கு உதவவும்.



மகர ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 7-ல் குரு, 10-ல் செவ்வாய், சனி உலவுவதால் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். நல்லவர்களின் தொடர்பு நலமாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். புதிய சொத்துக்கள் சேரும். உடன்பிறந்தவர்கள் தொழில் ரீதியாக உதவுவார்கள்.

சுக்கிரன் 6-லும் சூரியன், புதன் 7-லும் இருப்பதால் கணவன்-மனைவி உறவு நிலை ஒருநாள்போல் மறுநாளிராது. விட்டுக் கொடுத்து போகவும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்க்கவும். வாரப் பின்பகுதியில் பொருள்வரவு அதிகரிக்கும். ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 1, 3 (முற்பகல்)

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடமேற்கு

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்

எண்கள்: 3, 7, 8, 9

பரிகாரம்: சுக்கிரனுக்குப் பிரீதியாக மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவவும்.



கும்ப ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன், புதன் உலவுவதால் அறிவாற்றல் பளிச்சிடும். பிறரிடம் அன்புடன் பழகுவீர்கள். மன உற்சாகம் பெருகும். கலைத்துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை நிலவும். பெண்களின் எண்ணம் ஈடேறும். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்கள் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும்.

நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். குரு, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சுப காரியங்கள் தடைப்படும். பிற மொழி, மத, இனக்காரர்களிடம் விழிப்புத் தேவை. பொருளாதாரத் துறையில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்டமான தேதி: ஆகஸ்ட் 3 (முற்பகல்)

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு

நிறங்கள்: பச்சை, இளநீலம், வெண்மை, ஆரஞ்சு

எண்கள்: 1, 5, 6

பரிகாரம்: துர்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும். வேதம் படித்தவர்களையும் குடும்பப் பெரியவர்களையும் வணங்கி வாழ்த்துக்களைப் பெறவும்.



மீன ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் குரு சஞ்சரிப்பதால் சுக செளக்கியம் கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் சேரும். மனதில் உற்சாகம் பெருகும். பிள்ளைகளாலும் வாழ்க்கைத்துணையாலும் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள் வெற்றி காண்பார்கள். பெண்களின் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

பணப் புழக்கம் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறு விபத்துக்கு ஆளாகலாம். கெட்டவர்களின் சகவாசம் கூடாது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். வேலையாட்களால் தொல்லைகள் சூழும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. எதிலும் அவசரம் கூடாது. குடும்ப நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான தேதி: ஆகஸ்ட் 1

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்

எண்கள்: 3, 6

பரிகாரம்: துர்கை, சுப்பிரமணியர், ஆஞ்சநேயர் அர்ச்சனை செய்யவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.



ராசி பலன்வார ராசி பலன்ராசிபலன்சந்திரசேகரபாரதி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x