வார ராசிபலன் 05-01-2017 முதல் 11-01-2017 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ல் சுக்கிரன், கேது ஆகியோருடன் இருப்பது சிறப்பாகும். புதன் 8-ல் உலவுவதும் நல்லது. 8-ம் தேதி முதல் புதன் 9-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. வார ஆரம்பத்தில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். சுகம் குறையும். 8-ம் தேதி முதல் நல்ல திருப்பம் ஏற்படும். மதிப்பு உயரும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். நிலம், மனை, வீடு, வாகனம் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.
செந்நிறப்பொருட்கள் லாபம் கொண்டுவரும். இயந்திரபணியாளர்களும் பொறியாளர்களும் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கைத் துணைவராலும், தொழில் கூட்டாளிகளாலும் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் அமைதி காண வழிபிறக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 9, 10.
திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு, பச்சை, இளநீலம்.
எண்கள்: 5, 6, 7, 9.
பரிகாரம்: குரு, சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். முக்கியமான எண்ணங்கள் இனிது நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.
ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும். நிலபுலங்கள் சேரும். ஆன்மிகவாதிகள், அறப்பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நிலை உயரப் பெறுவார்கள். தெய்வனுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். 4-ல் ராகுவும், 7-ல் புதனும் சனியும் 8-ல் சூரியனும் உலவுவதால் நண்பர்கள், உறவினர்களால் சங்கடம் ஏற்படும். பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 9, 10.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், பொன் நிறம்.
எண்கள்: 3, 7, 9.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் புதனும் சனியும் 9-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செய் தொழிலில் சீரான வளர்ச்சி காண வழிபிறக்கும். திரவப்பொருட்கள் லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். புதியவர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். பயணத்தின் மூலம் எண்ணங்கள் நிறைவேறும். தோல் பொருட்கள் லாபம் தரும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகைகளால் வருவாய் கிடைத்துவரும்.
கலைஞர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். 7-ல் சூரியனும், 9-ல் செவ்வாயும் கேதுவும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியமாகும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். என்றாலும் அவை பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும். ஆன்மிகவாதிகள், இயந்திரப் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படவும்
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 10 (இரவு).
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், நீலம், பச்சை.
எண்கள்: 4, 5, 6, 8.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசிக்கு 6-ல் சூரியனும் 8-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. இதர கிரகங்கள் கோசாரப்படி சாதகமாக உலவாததால் சில இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். குடும்ப நலனில் கவனம் தேவை. பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. ஊகவணிகத் துறைகளில் ஈடுபட வேண்டாம். மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.
புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பேச்சிலும் செயலிலும் வேகத்தைக் குறைத்துக் கொள்ளவும். எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. தெய்வப்பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். அரசு சம்பந்தமான காரியங்கள் இனிது நிறைவேறும். முக்கியஸ்தர்களின் சந்திப்பால் நலம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 9, 10 (பகல்).
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை.
எண்கள்: 1, 2, 6.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் தரும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 4-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ வாய்ப்புகள் கூடிவரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். மாணவர்களது திறமை வெளிப்படும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். 8-ம் தேதி முதல் புதன் 5-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது.
எனினும் புதனும் குருவும் பரிவர்த்தனை பெறுவதால் மக்களால் அதிக நலம் உண்டாகும். மனமகிழ்ச்சியும் கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். 4-ல் சனியும், 7-ல் செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோரும் உலவுவதால் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் நலனிலும் அக்கறை தேவைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 9, 10.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், தாமரை நிறம், பச்சை.
எண்கள்: 1, 3, 5.
பரிகாரம்: நாக பூஜை செய்வது நல்லது. பராசக்தியை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களை முறியடித்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பொது நலப்பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். இயந்திரப் பணியாளர்களுக்கு ஆதாயம் கூடும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் நலம் பெறுவார்கள். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
4-ல் சூரியனும், 6-ல் சுக்கிரனும் 12-ல் ராகுவும் இருப்பதால் சுகம் குறையும். வாகனத்தில் பயணம் செய்யும்போது எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத் துணைநலனில் கவனம் தேவைப்படும். கலைஞர்கள், மாதர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 9, 10.
திசைகள்: மேற்கு, தெற்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்.
எண்கள்: 7, 8, 9.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி
