Published : 11 Oct 2014 12:30 PM
Last Updated : 11 Oct 2014 12:30 PM

வார ராசிபலன் 09-10-2014 முதல் 15-10-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 12-ல் சுக்கிரனும் உலவுகிறார்கள். 2-ல் செவ்வாய் குரு பார்வையுடன் சஞ்சரிக்கிறார். இதனால் எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நல்லவர்களது தொடர்பு நலம் சேர்க்கும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கான பயன் கிடைத்துவரும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். புதிய சொத்துக்கள் சேரும். 13-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடம் மாறுவதால் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

இயந்திரப்பணியாளர்களது நிலை உயரும். இஞ்சினீயர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு கூடும். 12-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் இருப்பதால் அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. வீண் விவகாரங்களில் தலையிடலாகாது. கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான நாள்: அக்டோபர் 10.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது. கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். அன்னதானம் செய்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே குரு பார்வையுடன் சஞ்சரிப்பது சிறப்பாகும். சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அரசு உதவி கிடைக்கும். தனவந்தர்கள், மேலதிகாரிகள், ஆகியோர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்ப்புக்கள் விலகும். வாழ்வில் முன்னேற நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பணப் புழக்கம் அதிகரிக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவார்கள்.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலைஞர்கள், மாதர்கள், மாணவர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி காணலாம். 5-ல் கேதுவும், 12-ல் சனியும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். மனதில் ஏதேனும் குழப்பம் உண்டாகும் என்றாலும் குரு வலுவாக உள்ளதால் சமாளித்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: கேதுவுக்கும் சனிக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. ஹனுமன் சாலீஸா படிக்கவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவுவது நல்லது. பிள்ளையாரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 11-ல் சனியும் சஞ்சரிப்பதால் முக்கியஸ்தர்களது தொடர்பால் நலம் பெறுவீர்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் புகழ் பெறுவார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபடலாம். அதனால் ஆதாயம் பெறவும் சந்தர்ப்பம் கூடிவரும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும்.

போக்குவரத்து இனங்களால் வருவாய் கூடும். தொழிலாளர்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகமாகும். 4-ல் கேதுவும், 8-ல் குருவும், 12-ல் செவ்வாயும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் நலனிலும் மக்கள் நலனிலும்கூட அக்கறை செலுத்த வேண்டிவரும். 13-ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, புகை நிறம், இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 4, 5, 8.

பரிகாரம்: குரு, கேது, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. குருமூர்த்தியை வழிபடவும். விநாயகருக்கு நெய்விளக்கேற்றி வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 7-ல் குருவும், 9-ல் சுக்கிரனும் 10-ல் சனியும், 11-ல் செவ்வாயும் உலவுவதால் எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். பிரச்சினைகள் எளிதில் தீரும். புதிய சொத்துக்கள் சேரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் கிடைக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். இஞ்சினீயர்களது நிலை உயரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். 13-ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் இடம் மாறுவதால் கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. எதிலும் அவசரம் கூடாது.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், மெரூன்.

எண்கள்: 3, 5, 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், சுக்கிரனும், 10-ல் செவ்வாயும் உலவுவதால் அறிவாற்றல் கூடும். வியாபார நுணுக்கம் தெரியவரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அளவோடு நலம் உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும்.

சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும். மனத்துணிவு கூடும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். 13-ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குரு 6-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட காரியங்களில் விழிப்புத் தேவை. 2-ல் கேதுவும் 8-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் குடும்ப நலனில் அக்கறை தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். பயணத்தின்போது பாதுகாப்பு அவசியம் தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்கலாகாது.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: குருப் பிரீதி செய்யவும். பெரியவர்களையும் மகான்களையும் வணங்கி அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும். சர்ப்பேஸ்வரரை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் குரு 5-ம் இடத்தில் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 9-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. பொருள்வரவு திருப்திகரமாகவே இருந்துவரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். சூரியன், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிர்ப்புக்கள் இருக்கவே செய்யும். பக்குவமாகச் சமாளிக்கவும். அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது.

கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும். பிற மொழி, மத, இனக்காரர்களிடம் விழிப்புத் தேவை. கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகி, நல்லவர்களின் நட்புறவை நாடிப் பெற்றால் நலம் கூடப் பெறலாம். கூட்டாளிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். 13-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடம் மாறுவதால் தொழில் சிறக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 10, 12, 13.

திசைகள்: வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 9.

பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும். ஏழைப் பெண்களுக்கு உதவுவது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x