Published : 04 Feb 2017 12:46 PM
Last Updated : 04 Feb 2017 12:46 PM

ஜோதிடம் என்பது அறிவியலா?- 7: ஜாதக கட்டத்தில் சூரியன் நகர்கிறதா?

சூரியன் ஒரு வெப்பம் தகிக்கும் நட்சத்திரம். இதை இக்கால அறிவியல் உறுதிபடுத்துகிறது. ஆனால் ஜோதிடத்தில் சூரியன் கிரகமாக கருதப்பட்டு நகருவதாக கூறப்படுகிறது. அது எவ்வாறு என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நிலவின் சுழற்சி ரகசியம்

பூமி என்னும் நாம் வாழும் கோள், சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியன் தன்னை தானே சுற்றிக்கொண்டு நிலையாக நிற்கிறது. தன்னை தானே சுற்றிக் கொண்டிருக்கும் பொருளின் மீது காந்தம் உருவாகும் என்ற அறிவியல் விதிப்படி. சூரிய காந்த புலம் உருவாக்கி, ஈர்ப்பு சக்தியை வெளிவிட்டு, மற்ற கிரகங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருகிறது.

அது போல பூமியும் சுற்றி வருகிறது. நிலவு பூமியில் இருதே உருவானது என்பது அறிவியல் கூறும் முன் நம் ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் கூறுகிறது. அந்த வரலாறை சுருக்கமாக காண்போம்.

அமிர்தம் அடைய பாற்கடலைக் கடைந்தனர் தேவர்களும் அசுரர்களும். இதில் பாற்கடல் என்பது பால்வெளி என்றும், சூரியன் ஒளி படும் இடம் தேவர்கள் என்றும் சூரிய ஒளி படாதபக்கம் அசுரர்கள் என்றும், நிர்ணயம் செய்து, மேரு என்ற புனித மலையை நிலை நிறுத்தி அமிர்தம் கடையபட்டது. அப்பொழுது நிலவு வெளிப்பட்டான் என்கிறது புராணம்.

அறிவியலும், அதிவேக சுழற்சியால், பூமியின் ஒரு பகுதி நிலவாக மாறியது என்கிறது. இப்பொழுதும் பூமியின் ஈர்ப்பு விசையாலேயே நிலவு பூமியைச் சுற்றிவருகிறது. இதை அறிவியலும் ஒத்துக்கொள்கிறது

முன்னோர்களின் கணக்கின் படி நிலவு 27.32 நாட்கள் பூமியை வலம் வர எடுத்துகொள்கிறது. அதுவே, ஜோதிடத்தில் 27 நட்சத்திர பெண்களுடன் சந்திரன் இருக்கிறான் என குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள் நிலவின் சுழற்சியை வைத்தே பூமி சுழலும் விதத்தை கணக்கிட்டனர்.

சூரியன் ராசிகளை வலம் வருகிறதா

ஒரு மாதத்திற்கு ஒரு முறை பூமி மட்டுமே நகர்கிறது சூரியன் நகர்வதில்லை. பிரபஞ்சத்தில் சூரியன் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நகர்கிறது என்கிறது அறிவியல். பூமியில் இருந்து பார்க்கும் போது, சூரியன் எந்த ராசியில் இருப்பார் என்ற நிலையை கொண்டே, முன்னோர்கள் மாதம் ஒருமுறை சூரியனை நகர்த்தி ஜோதிடம் பார்க்கும் முறை கணக்கிடபடுகிறது. ஆனால் உண்மையில் சூரியன் ஜாதக கட்டத்தில் நகர்வதில்லை. மாறாக பூமியின் சுழற்சிக்கு தக்கவாறு சூரியனை நகர்த்தி மாதங்கள் கணக்கிடும் முறையை வரையறுத்தனர் முன்னோர்கள்

இது போலவே, பூமி நகரும் நிலை பொருத்தே சனி, குரு, செவ்வாய், புதன், சுக்கிரன் நகருதல் குறிப்பிட படுகிறது. பூமியின் கால அளவு கணக்கான வருடம் (365 நாட்கள் ) வைத்தே, குரு ராசி விட்டு ராசி நகரும் பயணம், ஒரு வருடம் என்றும், சனி நகரும் கால அளவை இரண்டு அரை வருடங்கள் என்று வருட கணக்கில் மட்டுமே குறிப்பிடுகிறோம். இதன் அர்த்தம் அனைத்து கிரகங்களின் சுழற்சி அளவீடு, பூமியின் சுழற்சி நிலை வைத்தே அளக்கப்படுகிறது என்பதே உண்மை. இவ்வாறு அழைக்கப்படும் கிரக சுழற்சி கொண்டு, பூமியில் நடைபெறும் மாற்றத்தை அறிந்து ஜோதிடம் மூலம் வெளிப்படுத்துகின்றனர் ஜோதிடர்கள்

இவ்வாறு கிரகங்களின் நகர்வை கோள்சாரம் என்று கூறுகின்றனர். கோள் + சாரம் = கோள்களின் நகர்வு என்று அர்த்தம். பூமியில் இருந்து பார்க்கையில் கிரகங்கள் கீழ்க்கண்ட கால அளவில் சூரியனை சுற்றி வருகிறது.

சூரியன் - 1 மாதம்

சந்திரன் - 2 1 /4 நாட்கள்

செவ்வாய் - 49 நாட்கள்

புதன் - 1 மாதம்

குரு - 1 வருடம்

சுக்கிரன் - 1 மாதம்

சனி - 2 1 /2 வருடங்கள்

ராகு - 18 மாதங்கள்

கேது - 18 மாதங்கள்

(மேலும் அறிவோம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x