

துலாம்
சூரியன், குரு, சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் மதிப்பு உயரும். செல்வாக்கு கூடும். உடல் நலம் சீராகும். அரசியல்வாதிகளது நிலை உயரும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும்.
பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். ஜன்ம ராசியில் ராகுவும், வக்கிர சனியும், 12இல் வக்கிர செவ்வாயும் உலவுவதால் பயணத்தின்போது விழிப்புத்தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாரப் பின்பகுதியில் நல்லதொரு தகவல் வந்து சேரும். புதிய பதவிகள் சிலருக்குக் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6.
பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.
விருச்சகம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11ஆமிடத்திலும் சுக்கிரன் 3இலும், புதன் 4இலும் கேது 6இலும் உலவுவது சிறப்பாகும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புக்கள் விலகும். நல்ல தகவல் வந்து சேரும். பெண்களது எண்ணம் ஈடேறும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.
ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். பேச்சாற்றல் கூடும். சனி 12இல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். வீண் செலவுகள் சற்றுக் குறையும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.
எண்கள்: 5, 6, 7, 9.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 26.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு.
பரிகாரம்: குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது. துர்கைக்கு நெய்தீபம் ஏற்றவும். வேதம் படிப்பவர்களுக்கு உதவி செய்யவும்.
தனுசு
உங்கள் ராசிக்கு 2இல் சுக்கிரனும் 7இல் குருவும் 10இல் செவ்வாயும், 11இல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும். பெரியவர்கள், தனவந்தர்கள் உதவுவார்கள். எதிரிகள் அடங்கிப்போவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டாகத் தொழில் புரிபவர்கள் ஏற்றம் காண்பார்கள்.
கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கஜானாக்கள் போன்ற பொருள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். புதன் 3இல் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும்.
எண்கள்: 3, 4, 6, 8, 9.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, பொன் நிறம்.
பரிகாரம்: மகாவிஷ்ணுவையும் பிள்ளையாரையும் வழிபடவும்.
மகரம்
உங்கள் ராசியில் சுக்கிரனும் 2இல் புதனும் 3இல் சூரியனும் 10இல் ராகுவும் உலவுவதால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். பிறர் உங்களைப் பாராட்டுவார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.
பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் செழிக்கும். எழுத்து, பத்திரிகை, கணிதம், விஞ்ஞானம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் பதவி, பட்டங்கள் கிடைக்கும். தாய் நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவைப்படும்.
நிறங்கள்: நீலம், வெண்மை, கறுப்பு, ஆரஞ்சு, பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, கிழக்கு.
பரிகாரம்: விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். பெரியவர்களிடம் பணிவன்புடன் பழகுவது நல்லது.
கும்பம்
3இல் கேதுவும், 5இல் குருவும், 12இல் சுக்கிரனும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்களது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். பண வரவு கூடும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். மக்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும்.
மூத்த சகோதர, சகோதரிகள் உதவிபுரிவார்கள். வாழ்க்கை வசதிகள் பெருகும். 2இல் சூரியனும், 8இல் வக்கிர செவ்வாயும், 9இல் வக்கிர சனியும், ராகுவும் உலவுவதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். இளைய சகோதர, சகோதரிகளால் மன வருத்தம் உண்டாகும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் கவனம் தேவை. வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். இயந்திரப்பணியாளர்கள், இன் ஜினீயர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
எண்கள்: 3, 6, 7.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், பொன் நிறம், நீலம்.
பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியமாகும். முருகனையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
மீனம்
உங்கள் ராசிக்கு 11இல் சுக்கிரன் உலவுவதால் மன உற்சாகம் கூடும். கலைத்துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ஆடவர்களுக்குப் பெண்டிரால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். ராசிநாதன் குரு 4இல் இருந்தாலும் 8, 10, 12ஆமிடங்களைப் பார்ப்பதால் பிரச்னைகள் சற்று குறையும். தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம்.
வீண் செலவுகள் குறையும். சுபச் செலவுகள் கூடும். ஜன்ம ராசியில் சூரியனும் 2இல் கேதுவும் 8இல் ராகுவும் இருப்பதால் உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கும். தலை, கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். பயணத்தின்போது விழிப்புத் தேவை. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். வாரப் பின்பகுதியில் மனத்துக்கினிய சம்பவம் ஒன்று நிகழும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 26.
திசை: தென்கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை.
எண்: 6.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். நவக்கிரகங்களுக்குரிய காயத்ரி சொல்லவும்.