Published : 22 Dec 2016 09:52 AM
Last Updated : 22 Dec 2016 09:52 AM

வார ராசிபலன் 22-12-2016 முதல் 28-12-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அவை பெரும்பாலும் சுபச் செலவுகளாகவே இருக்கும். தொழில் ரீதியாகச் சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் கூடும்.

கேளிக்கைகளிலும் விருந்துகளிலும் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 23 (பிற்பகல்), 26. | திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், இளநீலம், ஆரஞ்சு. | எண்கள்: 1, 4, 6.

பரிகாரம்: குரு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பம் மிகச் சிறப்பானதாக அமையும். முக்கியமான எண்ணங்கள் இனிது நிறைவேறும். பண நடமாட்டம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆதரவு கிடைக்கும்.

வாரப் பின்பகுதியில் அலைச்சல் அதிகமாகும். கடுமையாக உழைக்க வேண்டிவரும். உடல்நலனில் கவனம் தேவை. தலை, இதயம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வியாபாரிகள், தொழிலாளர்கள், இயந்திரப் பணியாளர்கள், விவசாயிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். பயணத்தால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 22, 23 (முற்பகல்), 26.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு | நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், இளநீலம்.

எண்கள்: 3, 4, 6 | பரிகாரம்: செவ்வாய், சனி, கேதுவுக்கு அர்ச்சனைகள் செய்வது நல்லது.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது நல்லது. முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் இனிது நிறைவேறும். நல்லவர்கள் உங்களுக்கு நலம்புரிய முன்வருவார்கள். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். விருந்துகளிலும், உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நிலை உயரும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும்.

எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வாரப் பின்பகுதியில் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். செய்தொழிலில் அதிக கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்ளவும். உடன் பிறந்தவர்களால் பிரச்சினைகள் ஏற்படும்; சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 22, 23.| திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு | எண்கள்: 6, 7, 9

பரிகாரம்: ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் புதனும் சனியும் உலவுவதால் தோற்றப்பொலிவு கூடும். மனமகிழ்ச்சி பெருகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கணவன், மனைவி இடையே களிப்புறவு கூடும்.

மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். செய்தொழில் விருத்தி அடையும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். சூரியன், செவ்வாய், ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் கண், வாய் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பேச்சில் சூடான வார்த்தைகளைத் தவிர்க்கவும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 23, 26 | திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு

நிறங்கள்: நீலம், பொன் நிறம் | எண்கள்: 3, 5, 6, 8.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், சனி ஆகியோரும், 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். முக்கியமானவர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்வீர்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.

தந்தையால் நலம் உண்டாகும். ஜன்ம ராசியில் செவ்வாயும் கேதுவும், 7-ல் ராகுவும், 8-ல் குருவும் இருப்பதால் எதிலும் பதற்றம் கூடாது. கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. இயந்திரப் பணியாளர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். முன்பின் தெரியாதவர்களிடம் விழிப்புத் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 23 (பிற்பகல்), 26. | திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு

நிறங்கள்: நீலம், பச்சை, ஆரஞ்சு | எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்: நாக பூஜை செய்யவும். குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் சூரியனும் 11-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பொருளாதார நிலை உயரும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். பயணத்தால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். எதிர்ப்புக்கள் அடங்கியே இருக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும்.

அரசியல்வாதிகளும் அரசுப் பணியாளர்களும் செழிப்பு பெறுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள் சேரும். செவ்வாய், புதன், சனி, கேது ஆகியோர் அனுகூலமாக உலவாததால் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 22, 23 (முற்பகல்), 26.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு | நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 6 | பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x