Published : 22 Jan 2015 12:57 PM
Last Updated : 22 Jan 2015 12:57 PM

வார ராசி பலன் 22-01-2015 முதல் 28-01-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பு. சூரியன், புதன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவி, பட்டங்களைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.

தந்தையால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் நன்மைகள் ஏற்படும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். 23-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவதால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். 28-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவதால் எதிர்ப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அதிகம் நலம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 23, 26.

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 1, 4, 5, 9.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் 9-ம் இடத்தில் உலவுவது விசேஷம். செவ்வாய், கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதாலும், குரு வக்கிரமாக உலவுவதாலும் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும்.

ஆன்மிகவாதிகள், அறநிலையப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரவேற்பு கூடும். பெண்களின் நிலை உயரும். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். 23-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது. இருந்தாலும் செய்தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். 28-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். குடும்ப நலம் சீராகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 23, 25, 26.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 7, 9.

பரிகாரம்: ராகு, துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் புதன் சுக்கிரனுடன் கூடி 8-ல் அமர்ந்து, குருவின் பார்வையைப் பெறுவதாலும், சனி 6-லும், கேது 10-லும் சஞ்சரிப்பதாலும் பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

பெண்களுக்கு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். மன உற்சாகம் பெருகும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 23, 25, 26.

திசைகள்: வடமேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7, 8.

பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ருத்திரம், ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு உலவுவது ஒன்றே சிறப்பு. இதர கிரகங்கள் கோசாரப்படி சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்படவே செய்யும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. யாரிடத்திலும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். கெட்ட எண்ணங்களுக்கும், கெட்டவர்களின் தொடர்புக்கும் இடம் தரலாகாது. இயந்திரங்களில் பணிபுரியும்போது எச்சரிக்கை தேவை.

விபத்துக்கு ஆட்பட நேரலாம் என்பதால் எக்காரியத்திலும் நிதானமாக செயல்படுவது அவசியம். ஜாதக பலமும் இல்லாதவர்கள் இறை வழிபாட்டிலும் கிரக வழிபாட்டிலும் முழு நம்பிக்கையோடு ஈடுபடுவதன் மூலம் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம். 23-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறுவதால் கலைத்துறையினருகுப் பிரச்சினைகள் குறையத் தொடங்கும். வாரக் கடைசியில் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 25, 26.

திசை: தென்மேற்கு.

நிறங்கள்: புகை நிறம், கறுப்பு.

எண்: 4.

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் 6-ல் புதனுடன் உலவுவதாலும் குரு 12-ல் வக்கிரமாக இருப்பதாலும் நிர்வாகத்திறமை கூடும். அரசு உதவி கிடைக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையினர் லாபம் அடைவார்கள். எதிர்ப்புகள் குறையும். அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மதிப்பு உயரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம்.

பண வரவு சற்று அதிகரிக்கும். அலைச்சலும் உழைப்பும் கூடும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம். எச்சரிக்கை தேவை. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சகிப்புத் தன்மை தேவை. எதிர்பாராத பொருள்வரவுக்கு இடமுண்டு.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 23.

திசைகள்: வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5.

பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பு. மனத்துக்கு இனிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும் நேரமிது. பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு பாக்கியமும், பிள்ளைகளால் அனுகூலமும் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். எதிர்ப்புகள் விலகும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். நல்லவர்களது தொடர்பால் நலம் பெருகும். அலைச்சல் அதிகமாகும். குடும்பத்தில் பிரச்சினைகள் சூழும். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பு தேவை. வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 22, 23, 25, 26.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம்: விநாயகர், துர்கையை வழிபடுவது நல்லது. நாக வழிபாடு சங்கடங்களைக் குறைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x