பிரசாதம்

பிரசாதம்
Updated on
1 min read

ஹோமங்கள், யாகங்கள் ஆகியவை தேவர்களையும் தெய்வங்களையும் திருப்திப்படுத்துவதற்காகச் செய்யப்படுபவை. இவற்றால் மகிழ்ச்சியடையும் தேவர்கள், மனிதர்களுக்கு அருள்புரிவார்கள். ‘இது எனதல்ல’ என்னும் மனநிலையோடு தெய்வங்களுக்கு அர்ப்பணம் செய்வதே யாகங்களின் அடிப்படை. இந்த அர்ப்பணத்துக்கான பலன் அர்ப்பணம் செய்பவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்து மனிதர்களுக்கும் கிடைக்கும். அந்த யாகங்களில் சிலவற்றையும் அவற்றின் பலன்களையும் இங்கே காணலாம்.

பஞ்ச யக்ஞ ஹோமத்தின் பலன்கள்

• கணபதி ஹோமம் - தடைகள் விலகி சகல செல்வங்களும் கிடைக்கும்.

• மகாசண்டி ஹோமம் - பயம், தரித்திரம், எதிரிகள் தொல்லை நீங்கும்.

• நவக்கிரக ஹோமம் - கிரக தோஷங்களை நீக்கும்.

• மகாசுதர்சன ஹோமம் - ஏவல், பில்லி சூனியம், எதிரிகளை அழிக்கும், வெற்றி கிட்டும்.

• ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தியடையும்.தொகுப்பு: யோகி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in