

மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது சிறப்பாகும். 5-ல் உள்ள சூரியனும் 9-ல் உலவும் செவ்வாயும் ஓரளவு நலம்புரிவார்கள். வார முன்பகுதியில் எண்ணங்கள் நிறைவேறும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வார நடுப்பகுதியில் சுபச் செலவுகள் இருக்கும். வாரப் பின்பகுதியில் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணவரவு சற்று அதிகமாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடத்திற்கு மாறுவதால் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். 19-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. மக்கள் நலனில் கவனம் தேவை. வேலையாட்கள் மீது அதீத நம்பிக்கை வேண்டாம். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். தொலைதூரத் தகவல் பலன்தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 19.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 7, 9.
பரிகாரம்: ஆஞ்சநேயரையும் சிவபெருமானையும் வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் குருவும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 17-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடத்திற்கு மாறுவது குறை ஆகும். 19-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு மாறுவதும் சிறப்பாகாது. வார முன்பகுதியில் தொழில்ரீதியாக வளர்ச்சி காணலாம். தெய்வப் பணிகள் நிறைவேறும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். மக்களால் மனமகிழ்ச்சி பெருகும். எதிர்பாராத பணம் மற்றும் பொருட்சேர்க்கை நிகழும். கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்குமிடையே கருத்து வேறுபாடுகள் கூடும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் எழும். எக்காரியத்திலும் வேகம் கூடாது; விவேகம் தேவை. இயந்திரங்களை கையாளும்போது பாதுகாப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்:
செப்டம்பர் 15, 16, 18.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் ராகுவும், 4-ல் சுக்கிரனும் 6-ல் சனியும் உலவுவது நல்லது. 17-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. 19-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடத்திற்கு மாறுவது வரவேற்கத்தக்கது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியங்களில் வெற்றி காணலாம். திரவப்பொருட்கள் லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். விருந்து, உபசாரங்களிலும் கலந்து மகிழ்வீர்கள். பயணத்தால் நலம் உண்டு. உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். 19-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். உயர் பொறுப்புக்களும் பதவிகளும் தேடிவரும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 18, 19.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 6, 8.
பரிகாரம்: கணபதி ஹோமம் செய்வது நல்லது. மலை மேல் அமைந்துள்ள விஷ்ணு ஆலங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பாகும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. 17-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். 19-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடத்திற்கு மாறுவது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாகவே காணப்படும். மனக்குழப்பம் உண்டாகும். விஷ பயம் ஏற்படும். காரியம் தடைப்படும். அதன்பிறகு நல்ல திருப்பம் ஏற்படும். நல்ல தகவல் வந்து சேரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அரசாங்கப் பணிகள் ஆக்கம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். புதிய முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 18, 19.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், சிவப்பு.
எண்கள்:
1, 5, 6, 9.
பரிகாரம்:
விநாயகரையும் குருமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். சூரியனும் செவ்வாயும் ஓரளவு நலம் புரிவார்கள். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். தெய்வப் பணிகளில் நாட்டம் கூடும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். முக்கியப் பொறுப்புக்களும் பதவிகளும் கிடைக்கும். 17-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடத்திற்கு மாறுவதால் அரசுதவி கிடைக்கும். 19-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்பான பாதை புலப்படும். அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 19.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 6, 9.
பரிகாரம்: சனி, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் சனியும், 6-ல்கேதுவும் உலவுவது சிறப்பாகும். 17-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. 19-ம் தேதி முதல் சுக்கிரன் 2- ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். அறப்பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் வளர்ச்சி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைக்கும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். பெண்களால் நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16, 18.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: மகாவிஷ்ணுவையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.