

துலாம்
துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 9-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் சூரியனும் உலவுவதால் எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். வழக்கு, விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். நல்லவர்களது நட்புறவு கிடைக்கும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
ஜன்ம ராசியில் செவ்வாயும், சனியும், 12-ல் ராகுவும் இருப்பதால் எக்காரியத்திலும் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. 23-ஆம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதால் சொந்தத் தொழில் விருத்தி அடையும். மாணவர்களது நிலை உயரும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்கள் லாபம் தரும். அதிர்ஷ்டமான தேதிகள்: ,ஜூலை 18, 23.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு | நிறங்கள்: மெரூன், பச்சை, வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 7 | பரிகாரம்: துர்க்கையையும், சுப்பிரமணியரையும் வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 8-ல் புதன், சுக்கிரன் ஆகியோரும் 9-ல் குருவும் 11-ல் ராகுவும் சஞ்சரிப்பது விசேடமாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
பயணத்தால் நலம் உண்டாகும். புதியவர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். அவர்களால் அனுகூலம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். 12-ல் உங்கள் ராசிநாதன் செவ்வாயும் சனியும் கூடியிருப்பதால் தூக்கம் கெடும். இயந்திரங்களில் பணிபுரிபவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், சுரங்கப்பணியாளர்கள், கட்டடப் பணியாளர்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 18, 23 | திசைகள்: வடகிழக்கு, வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம்.
எண்கள்: 3, 4, 5, 6 | பரிகாரம்: சுப்பிரமணியரையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும்.
தனுசு
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் நண்பர்கள் உதவுவார்கள். மக்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் ஏற்படும். பயணம் பயன்படும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். பண வரவு சீராக இருந்துவரும். சுபச் செலவுகள் சற்று அதிகமாகும்.
குடும்பத்தில் அமைதி காணலாம். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 4-ல் கேதுவும் 8-ல் சூரியனும் குருவும் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. பெற்றோர் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். 23-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவது சிறப்பாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 18, 23 | திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, புகை நிறம் | எண்கள்: 4, 8, 9.
பரிகாரம்: சூரியன், சுக்கிரன், கேது ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. சிவபெருமானையும், பராசக்தியையும் வழிபடவும்.
மகரம்
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 6-ல் புதனும் 7-ல் குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும் நேரமிது. எதிரிகள் விலகிப் போவார்கள். பொறியியல், சட்டம், காவல் இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவர்கள். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். 6-ல் சுக்கிரனும், 7-ல் சூரியனும் உலவுவதால் வாழ்க்கைத் துணையின் நலனில் கவனம் தேவைப்படும். கேளிக்கை, உல்லாசங்களைக் குறைத்துக்கொள்ளவும். பெண்களுக்குச் சோதனையான நேரமிது. செய்துவரும் தொழிலில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். 23-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 18, 23 | திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம், ஆரஞ்சு | எண்கள்: 3, 5, 7, 8, 9..
பரிகாரம்: சுக்கிரனுக்குப் பிரீதியாக மகாலட்சுமியை வழிபடுவது நல்லது. சுமங்கலிப் பிரார்த்தனை செய்யவும். ஏழைப் பெண்களுக்கு உத்வி செய்யவும்.
கும்பம்
கும்ப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 5-ல் புதனும் சுக்கிரனும், 6-ல் சூரியனும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். பொருளாதாரச் சிக்கல் உண்டாகும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்பட வேண்டிவரும். பேச்சில் நிதானம் தேவை. கண், வாய், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும்.
அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். மக்களால் அளவோடு நலம் உண்டாகும். 23-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மாணவர்களது நிலை உயரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 18, 23 | திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, இளநீலம், வெண்மை, ஆரஞ்சு | எண்கள்: 1, 5, 6
பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபடவும். அந்தணர்களுக்கும், வேத விற்பன்னர்களுக்கும் உதவி செய்யவும்.
மீனம்
மீன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும் 5-ல் குருவும் சஞ்சரிப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வியாபார முன்னேற்ற நடவடிக்கைகள் வெற்றி பெறும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பண வரவு அதிகமாகும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வயிறு, கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக, யோசித்து ஈடுபடுவது அவசியமாகும். உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும். வேலையாட்களால் தொல்லைகள் சூழும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். குடும்ப நலனில் கவனம் தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். 23-ம் தேதி முதல் புதன் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 18, 23 | திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம், பச்சை | எண்கள்: 3, 5, 6.
பரிகாரம்: நாகரை வழிபடவும். முருகனுக்கும், ஆஞ்சநேயருக்கும் அர்ச்சனை செய்யவும்.