வார ராசிபலன் 02-10-2014 முதல் 08-10-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

வார ராசிபலன் 02-10-2014 முதல் 08-10-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)
Updated on
3 min read

துலாம் ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுகிறார்கள். 2-ல் செவ்வாய் குரு பார்வையுடன் சஞ்சரிக்கிறார். இதனால் பொருளாதார நிலை உயரும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். ஜன்ம ராசியில் சனி இருப்பதால் உழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை.

அரசியல், நிர்வாகம், வியாபாரம், போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். உடல்நலனில் கவனம் தேவை. அண்டை வீட்டாருடன் சுமுகமாகப் பழகிவருவது நல்லது. கனவு தொல்லை தரும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 6 (முற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. தந்தை வழி உறவினருக்கும் உதவி செய்யவும். துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். .

விருச்சிக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே குரு பார்வையுடன் உலவுவதாலும், சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதாலும் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். முகப்பொலிவு கூடும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள் ஆகியவை லாபம் தரும்.

புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். கணிதம், எழுத்து, ஓவியம், தரகுத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். சிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். குரு பலம் இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 6 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு..

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.. .

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கும் விநாயகருக்கும் தொடர்ந்து அர்ச்சனை, ஆராதனைகள் செய்து

வழிபடவும்.ஊனமுள்ளவர்களுக்கு உதவவும்.

தனுசு ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன். ராகு ஆகியோரும் 11-ல் சனியும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தெய்வ காரியங்களிலும் தர்மகாரியங்களிலும் ஈடுபாடு கூடும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். பணவரவு அதிகமாகும். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். வியாபாரம் பெருகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும்.

பூமியிலிருந்து வெளிப்படும் தாதுப் பொருட்களும் விளைபொருட்களும் லாபம் தரும். 4-ல் கேதுவும், 8-ல் குருவும், 12-ல் செவ்வாயும், உலவுவதால் உங்கள் நலனிலும், உங்கள் தாய் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும். மக்களால் செலவுகள் கூடும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபடவேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 6 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, புகை நிறம், இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 4, 5, 8.

பரிகாரம்: விநாயகரையும், தட்சிணாமூர்த்தியையும் முருகனையும் தொடர்ந்து வழிபடவும். பெரியவர்களை வணங்கி, நல்வாழ்த்துக்களைப் பெறுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 9-ல் சுக்கிரனும் 10-ல் சனியும் 11-ல் செவ்வாயும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். ஆன்மிகப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். சமுதாய நல முன்னேற்றப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். மனத்தில் தன்னம்பிக்கை வேர்விடும். செயலில் வேகம் கூடும். புத்திசாலித்தனம் வெளிப்படும்.

பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனைகள் செய்வார்கள். ஜலப்பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். 9-ல் சூரியனும் ராகுவும் வக்கிர புதனும் உலவுவதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:,அக்டோபர் 3, 6 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்..மெரூன்.

எண்கள்: 3, 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரியன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். துர்கைக்கு நெய்விளக்கேற்றி வழிபடவும்.

கும்ப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் உலவுவது குறிப்பிடத்தக்கது. எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். இயந்திரப்பணியாளர்களுக்குச் செழிப்புக் கூடும். செந்நிறப்பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.

மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி சிறப்பாக இல்லாததால் சிறு இடர்ப்பாடுகளும் அவ்வப்போது ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத்துணைவராலும் மக்களாலும் தொல்லைகள் சூழும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. வேற்று மொழி, மத, இனக்காரர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 2, 6 (முற்பகல்), 8 (முற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு.

எண்கள்: 6, 9.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும் கேட்கவும் செய்யலாம். வேதம் படிப்பவர்களுக்கு உதவுவது நல்லது.

மீன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் குரு 5-ஆமிடத்தில் உலவுவது சிறப்பாகும். செவ்வாய் 9-ல் அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். நல்லவர்கள் உங்களுக்கு உற்றதுணையாக இருப்பார்கள். குடும்ப நலம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மக்களால் பெற்றோருக்கும் பெற்றோரால் மக்களுக்கும் அனுகூலம் உண்டாகும்.

பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை தேவைப்படும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். எதிரிகள் இருப்பார்கள். தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும். குரு பலத்தாலும் தெய்வ அனுக்கிரகத்தாலும் எதையும் சமாளித்து வருவீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 8 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 9.

பரிகாரம்: சூரியன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும். நாக வழிபாடு அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in