குன்றின் மேல் ஆறுமுக தரிசனம்

குன்றின் மேல் ஆறுமுக தரிசனம்
Updated on
1 min read

தமிழ்நாட்டில் முருகனுக்கு இருக்கும் அறுபடை வீடுகளைப் போன்றே இலங்கையிலும் இருக்கின்றன. இலங்கையில் கதிர்காமம், நல்லூர்கோயில், மாவிட்டபுரம், கொழும்பு, வில்லூன்றி, மேலைப்புலோலி ஆகிய இடங்களில் முருகனுக்கு கோயில்கள் உள்ளன. தமிழகத்தில் கோவையை அடுத்துள்ள சூலூர் மற்றும் சென்னை பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் முருகனின் அறுபடை வீடு கோவில்களும் ஒரே இடத்தில் அமைந்திருக்கின்றன. கோயிலின் கோபுர வடிவிலேயே முருகப் பெருமான் ஆறுமுகத்தோடும் காட்சியளிக்கும் கோயில் பெங்களூரூ, ராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ளது.

கோயில் இருக்கும் குன்று

குன்று இருக்கும் இடமெல்லாம் முருகனின் கோயில் இருக்கும் என்பார்கள். இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் கம்பீரமாக பெங்களூரூ, ராஜராஜேஸ்வரி நகரில் அமைந்துள்ளது ஷண்முகர் கோயில்.

சிருங்கேரி சாரதா பீடத்தின்  பாரதி தீர்த்த சுவாமிகளின் அறிவுறுத்தலின்படி ஒரே இடத்தில் அறுபடை வீட்டு முருகனையும் தரிசனம் செய்யும் வகையில் இந்தக் கோயிலை டாக்டர் அருணாச்சலம் என்பவர் நிர்மாணித்திருக்கிறார்.

கோபுரத்தில் ஆறுமுக தரிசனம்

ஷண்முகர் கோயிலின் மிகச் சிறப்பான அம்சமாக அமைந்துள்ளது கோபுரம். குன்றின் மேல் ஆறு முகங்களும் தெரியும்படி கோபுர அமைப்பு உள்ளது. முருகன் சன்னிதிகளைக் குன்றின் மேல் வட்ட வடிவத்தில் அமைத்துள்ளனர். முருகனை தரிசிப்பதற்கு முன்பாகவே பஞ்சமுக விநாயகர் சன்னிதி உள்ளது.

சூரிய கிரண அபிஷேகம்

கோயிலின் உச்சியில் சூரிய ஒளியை கிரகிக்கும் சென்சார்கள் உள்ளன. இதன் மூலமாக காலை முதல் மாலை வரை அதிகபட்ச சூரிய ஒளியை கிரகிக்கும் வகையில் அமைத்துள்ளனர். இப்படி கிரகிக்கப்படும் சூரிய ஒளி மூல விக்கிரகத்தின் மீது விழுகிறது. இதை சூர்யா கிரண அபிஷேகம் என்கிறார்கள்.

கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள பளிங்கு குவிமாடம். இதை 42 அடி உயரத்தில் அமைத்துள்ளார்கள். இந்தக் குவிமாடத்தில் ஆயிரக்கணக்கான பளிங்குக் கற்கள் பதித்துள்ளனர். சூரிய ஒளியில் பல வண்ண நிறங்களை வெளிப்படுத்தும் இந்தக் கற்கள், இரவில் ஒளிமயமான விளக்குகளால் ஜொலிக்கின்றன. ஷண்முகர் கோயிலில் சஷ்டி, கிருத்திகை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in