

அடிப்படையில் மகாத்மா காந்தி ஒரு ஆன்மிகவாதி. காந்தி எழுதிய சத்திய சோதனை நூலில் அவர் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தையும், வாக்கியங்களும் அவரை ஒரு ஆன்மிகவாதியாக அடையாளம் காட்டுகின்றன.
“கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். அவருடைய தரிசனம் எனக்கு இன்னும் கிட்டவில்லை. என்றாலும் அவரைத் தேடிக்கொண்டே இருக்கிறேன். இந்த முயற்சியில் வெற்றி பெற உயிரையே தியாகம் செய்து விட வேண்டியிருந்தாலும் அதைக் கொடுக்கவும் நான் தயார்’’ என்று குறிப்பிட்டார் காந்தி.
• நமது ஒவ்வொரு எண்ணத்தையும் கடவுள் நன்றாக அறிவார்.
• ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை.
• பொய்மை ஒருநாள் மறைந்து போகும். உண்மையே மேலே உயர்ந்து நிற்கும்.
• உலகிலுள்ள எல்லாச் சக்திகளையும் விட, ஆன்மிகச் சக்தியே அதிகப் பலம் வாய்ந்தது.
• தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
• பிரார்த்தனை என்பது தன்னடக்கம் நிரம்பிய தாகவும் உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.
• உங்களுடன் பேசாதவர்களிடமும், முகம் கொடுத்துப் பேச முற்படுங்கள்.
• நம் எண்ணம் முழுவதையும் கடவுள் அறிவார் என்ற உண்மையை உணர்ந்துகொண்டால், அந்த வினாடியே நமக்கு விடுதலை கிடைத்துவிடும்.
• இதயத்தில் தூய்மையுடன் செய்யும் வழிபாடு, தியானத்தைக் கடவுள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்.
• கடவுளிடம் நம் குறைகளைச் சொல்லி முறையிடுவது வெறும் மூடநம்பிக்கை அல்ல.
• நற்செயல்கள் அனைத்தும் இறுதியில் ஒருநாள் பலன் அளித்தே தீரும் என உறுதியாக நம்புங்கள்.
• தெய்வத்தின் கணக்குப் புத்தகத்தில் நம் செயல்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றன. நாம் பேசியவையும், படித்தவையும் அல்ல.
• பாவத்தை மனதில் மறைத்து வைக்காதீர்கள். அது உடலில் மறைந்து கொல்லும் நஞ்சு போன்றது.
• கடவுள் உண்மை என்று கூறுவதைவிட, உண்மையே கடவுள் என்பது சிறந்தது.
• கடவுளின் சித்தத்தை அறிந்துகொள்ளும் சக்தி யைத் தகுந்த பயிற்சியின் மூலம் பெற முடியும்.
• பிறருக்காகத் தியாகம் செய்யும் மனநிலை கொண்டவனால், தனக்காக எதையும் தேட நேரம் இருக்காது.
• இன்றைய பொழுதை நாம் பார்த்துக்கொண்டால் நாளைய பொழுதைக் கடவுள் பார்த்துக்கொள் வார். நிம்மதியாக வாழ்வதற்கு இதுவே நல்வழியாகும்.
• தவறை மன்னிக்கும் குணம் ஒருவரின் உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும்.
• ஆன்மிக வாழ்வின் அடிப்படை குணம் அஞ்சாமை. உண்மையைச் சொல்வதற்காகத் தூக்கு மரம் ஏற வேண்டியிருந்தாலும் அஞ்சாமல் சொல்லுங்கள்.
• அன்பு எப்போதும் சகிப்புத்தன்மை கொண்ட தாகவே இருக்கும்.
• இறைவனோடு இரண்டறக் கலக்கும் நோக்கத் தோடு செயலாற்றுவதே வைராக்கிய வாழ்வாகும். இந்நிலை பெற மனமும் உடலும் நல்ல விஷயங்களில் மட்டுமே ஈடுபடுதல் வேண்டும்.
• பெண்ணைப் பலமற்றவள் என்று கூறுவது அவளை நிந்திப்பதாகும். பெண்ணுக்கு உடல்பலம் குறைவு என்றாலும் ஆன்மபலம் மிக அதிகம்.
• ஏழைகளுக்குத் தொண்டு செய்வதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு உலகில் வேறு கிடையாது.
• சத்தியக் கோயிலை அடைய விரும்புபவர்கள் அகிம்சை என்னும் பாதையில் நடை பயில வேண்டும்.
• நமக்குக் கடவுளே மூலமாக இருக்கிறார். அவர் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்.
• கடவுள் என்ன நோக்கத்துடன் உயிர்களைப் படைத்தார் என்பதை நம்மால் அறிய முடியாது. படைப்பின் ரகசியத்தைக் கடவுள் மட்டுமே அறிவார்.
• கடவுள் பொறுமையோடு அனைத்தையும் சகித்துக்கொள்கிறார். ஆனால், அவருடைய பொறுமைக்கும் எல்லையுண்டு.
• கோயில்கள் வெறும் கண்காட்சிக்காக ஏற்படுத்தப் பட்டவை அல்ல. தெய்வீக உணர்வை மக்களிடம் பரப்பும் பணியை மேற்கொண்டிருக்கின்றன.
• உண்ணாவிரதம் இருக்காமல் பிரார்த்தனை செய்ய முடியாது, பிரார்த்தனை செய்யாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது.
• கடவுளிடம் காணும் பரிபூரணத்துவத்தை வணங்குவதே தூய வழிபாட்டு நெறிமுறை. அவர் மட்டுமே சத்தியமானவர்.
• பகவத்கீதையைக் கிளிப்பிள்ளையைப் போலப் பாராயணம் செய்வதால் பலனேதும் இல்லை. அது காட்டும் உபதேசப்படி நடந்து காட்ட வேண்டும்.
• யாரை வழிபடுகிறோமோ, அந்தத் தெய்வம் காட்டியே வழியில் நடப்பதே உண்மையான வழிபாடு. மற்ற பிரார்த்தனைகள் எல்லாம் நம்முடைய நேரத்தை வீணடிப்பதாகும்.
தொகுப்பு: டி. கார்த்திக்