

மேஷ ராசி வாசகர்களே
குரு, சுக்கிரன், கேது ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதால் முயற்சி வெற்றி தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். ஆன்மீக, அறநிலைய பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் மனத் தெளிவு பெறுவார்கள். அலுவலுகப் பணியாளர்களது நிலை உயரும். அரசுப் பணிகளில் விழிப்பு தேவை.
வியாபாரிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம். இயந்திரப் பணியாளர்கள், இஞ்ஜீனியர்கள் சங்கடங்களுக்கு ஆளாக நேரும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை தேவை. கலைத் துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்து வரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சிக் காணலாம். வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணம் ஒன்று நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 23.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: துர்கை, சூரியநாராயணரை வழிபடுவது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
சூரியன், புதன், கேது ஆகியோர் சிறப்பாக உலவுகிறார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். பேச்சாற்றல் வெளிப்படும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். ஜலப் பொருட்கள் லாபம் கொண்டு வரும். நிறுவன நிர்வாகத் துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழி பிறக்கும். ஆன்மீக, அறநிலைய, ஜோதிடப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணவன் மனைவியிடையே சச்சரவுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போகவும். கூட்டாளிகளை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் தக்க தருணத்தில் உதவுவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 23.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், பச்சை.
எண்கள்: 1, 5, 7.
பரிகாரம்: ராகுவுக்கு ப்ரீதியாக துர்க்கையை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பேச்சில் திறமை வெளிப்படும். குடும்பநலம் சீராகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும்.
இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். விவசாயிகளது எண்ணம் ஈடேறும். புதிய சொத்துகள் சேர வழி பிறக்கும். உழைப்பு வீண் போகாது. எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலில் ஆதாயம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்த காரியம் இப்பொழுது நிறைவேறும். எதிரிகள் அடங்குவார்கள். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 23.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: நீலம், புகைநிறம், சிவப்பு.
எண்கள்: 1, 4, 5, 6, 8, 9.
பரிகாரம்: பசுநெய் தீபம் ஏற்றி வைத்து, குருவை வழிபடுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
குரு, சுக்கிர பலம் காரணமாக பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். கலைஞர்களது திறமை பளிச்சிடும். பெண்கள் நலம் பெறுவார்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். சுபச் செலவுகள் செய்ய வேண்டி வரும். புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.
திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் அதிகம் பாடுபட வேண்டி வரும். பயணம் சார்ந்த இனங்களில் எச்சரிக்கை தேவை. வாரப் பின்பகுதியில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். பெரியவர்களது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். தந்தையால் முக்கியமான எண்ணம் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 23.
திசை: வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், இளநீலம்.
எண்: 3, 6, 9.
பரிகாரம்: துர்க்கை, விநாயகரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
செவ்வாயும் புதனும் ஓரளவு நலம் புரிவார்கள். வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைத்து வரும். மாணவர்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். மக்கள் நலம் சீராகவே இருக்கும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.
அலைச்சலைத் தவிர்க்க இயலாமல் போகும். கணவன் மனைவியிடையே சச்சரவுகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். அரசியல், நிர்வாகம், ஆன்மீகம், கலை, மருத்துவம், ரசாயனம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் பொறுப்புணர்ந்து காரியமாற்றுவது நல்லது. தந்தையால் பிரச்சினைகள் ஏற்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்பு தேவை. கலைஞர்கள், மாதர்கள் ஆகியோருக்கு தொல்லைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 22, 23.
திசைகள்: தெற்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, பச்சை.
எண்கள்: 5, 9.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
செவ்வாய், சனி, கேது ஆகியோர் நலம் புரியும் நிலையில் சஞ்சரிக்கிறார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைத்து வரும். கடல் சார்ந்த தொழில் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்து வரும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டி, பந்தயங்கள், வழக்கில் வெற்றி கிடைக்கும்.
வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகமாகும். பெண்களால் சங்கடம் உண்டாகும். கலைஞர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பயணம் சார்ந்த இனங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்களுக்குப் பிரச்சினைகள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 23.
திசைகள்: தெற்கு, மேற்கு, வட மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, கருநீலம், மெரூன்.
எண்கள்: 7, 8, 9.
பரிகாரம்: குரு, சுக்கிரன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை ஆராதனைகள் செய்யவும்.