

இயேசு கிறிஸ்துவிடம் வந்த ஒரு மனிதர் அவர் முன்பாக மண்டியிட்டு, “ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும். அவன் நோய்வாய்ப்பட்டு மிகவும் வேதனைப்படுகிறான்; அவனைப் பார்க்கும்போது எனக்குச் சொல்ல முடியாத வேதனை உண்டாகிறது. அவனை உம்முடைய சீடர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைக் குணப்படுத்த அவர்களால் முடியாமல் போய்விட்டது” என்றார்.
இயேசு அமைதியாக, “அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்”. என்றார். பெரும் நோயால் வாடும் அந்த இளைஞனுக்குள் இருந்த பிசாசை அவர் அதட்டினார். அந்தப் பிசாசு உடனே அவனை விட்டு வெளியேறியது. அந்தக் கணமே இளைஞன் குணமடைந்தான்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்த சீடர்கள் இயேசு தனியாக இருக்கும்போது அவரிடம் வந்தார்கள். “நாங்களும் இதைத்தான் சொன்னோம். ஆனால் எங்கள் பேச்சுக்கு ஏன் மதிப்பில்லை?” என்று கேட்டார்கள்.
அதற்கு இயேசு, “உங்கள் அவிசுவாசம்தான் காரணம்” என்றார். “கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொன்னால் அது போகும். உங்களால் இயலாத காரியம் ஒன்றும் இராது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்தப் பிசாசு, ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்ற எந்த விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது” என்றார்.
ஆதாரம்: மத்தேயு17:14-21