

மேஷம்
உங்கள் ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய், ராகு உலவுவதால் மன மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களுடன் தொடர்பு கிட்டும். அதனால் அனுகூலம் உண்டாகும். பயணத்தால் ஒரு எண்ணம் ஈடேறும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகளில் வெற்றி கிட்டும்.
ஆராய்ச்சியாளர்களின் மதிப்பு உயரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். நல்லவர்கள் உதவ முன்வருவார்கள். அரசியல், நிர்வாகம், பொறியியல், போக்குவரத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்றம் கிடைக்கும். 4-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
எண்: 1, 4, 5, 6, 9. பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்யவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 7. திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு.
ரிஷபம்
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரன், 6-ல் சனி, 11-ல் கேது உலவுவது சிறப்பு. செல்வாக்கும் மதிப்பும் உயரும். தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்கள் சேரும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். உழைப்பு வீண் போகாது. தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
3-ல் குரு, 5-ல் செவ்வாய், ராகு உலவுவதால் மக்களால் சில இடர்பாடுகள் உண்டாகும். கர்ப்பிணிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். 4-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்களது நிலை உயரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: துர்கை அம்மன், சுப்பிரமணியர், திருக்கருக்காவூர் கர்ப்ப ரட்சகாம்பிகையை வழிபடவும்.
எண்கள்: 6, 7. நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு. அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 7, 9.
மிதுனம்
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 10-ல் கேது, 12-ல் சுக்கிரன் உலவுவதால் முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும்.உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். மனத்தில் தெளிவு பிறக்கும். முகப்பொலிவு கூடும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபடுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். 4-ல் ராகு, செவ்வாய் இருப்பதால் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து செயல்படுவது நல்லது.
பயணத்திலும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. உடல்நலனில் கவனம் செலுத்தவும். தாய் நலனிலும் அக்கறை தேவைப்படும். 4-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல்நலம் சீராகும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 7, 9. திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள். எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: முருகன், துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
கடகம்
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், ராகு, 11-ல் புன், சுக்கிரன் உலவுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்ப நலம் சீராகும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள். பயணத்தால் ஒரு எண்ணம் ஈடேறும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். புதிய பொருட்கள் சேரும்.
நிலபுலங்கள் லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனைப் படைப்பார்கள். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். அரசுப் பணியாளர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 4-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 7, 9.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, பச்சை. எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும். குருவுக்கு பசுநெய் தீபமேற்றி வழிபடவும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 10-ல் புதன், சுக்கிரன், 11-ல் சூரியன் உலவுவதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற இனங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.
2-ல் செவ்வாய், ராகு உலவுவதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. புதியவர்களை நம்ப வேண்டாம். 4-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் நுட்பத் திறமை வெளிப்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 7, 9. திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, இளநீலம். எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: சுப்பிரமணியர், விநாயகர், துர்கை அம்மனை வழிபடவும். வேதம் படிப்பவர்களுக்கு உதவவும்.
கன்னி
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், 11-ல் குரு உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். சுபச் செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். பொருளாதார நிலை உயரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். ஜன்ம ராசியில் செவ்வாய், ராகு உலவுவதால் அலைச்சல் அதிகரிக்கும்.
உடல் சோர்வு ஏற்படும். விளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர்கள் பாதுகாப்புடன் இருப்பது நல்லது. 4-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு செழிப்பான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 4, 7, 9. திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6. பரிகாரம்: துர்கை, விநாயகர், முருகன், நாகரை வழிபடுவது சிறப்பாகும்.