புராணப் பாத்திரங்கள் - அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்?

புராணப் பாத்திரங்கள் - அருந்ததியை ஏன் பார்க்க வேண்டும்?
Updated on
1 min read

திருமணச் சடங்கில் 'அருந்ததி பார்ப்பது' என்பது முக்கியச் சடங்கு வழக்கமாகப் பின்பற்றப்படுகிறது. யார் இந்த அருந்ததி? அருந்ததி தேவி சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி. வானில் வசிஷ்டரும் அருந்ததியும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருப்பதாக நம்பிக்கை உண்டு.

சப்தரிஷி மண்டலத்தை நாம் வானில் எளிதாகக் காண முடியும். அதில் நான்கு நட்சத்திரங்கள் ஒரு நீள்சதுரம்போல் தோன்றும். அதிலிருந்து வளைந்த வால்போல் மூன்று நட்சத்திரங்கள் வரிசையாக நீண்டு இருக்கும். அந்த மூன்றில் நடுவில் உள்ள நட்சத்திரம்தான் வசிஷ்டர். அதற்கு மிக அருகில் ஒளி வீசும் நட்சத்திரம்தான் அருந்ததி.

அருந்ததி தர்ம பத்தினியாகப் புராணக்கதைகளில் போற்றப்படுகிறார். அருந்ததி முன்ஜென்மத்தில் பிரம்மனின் மகளாக இருந்தார் .

அக்னி தேவனுடைய மனைவி ஸ்வாஹா, முனிவர்களின் மனைவியரைப் போல் உருவம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவள். ஒருமுறை அவளுக்கு அருந்ததியைப் போல உருமாற விருப்பம். அவளும் பலமுறை உருமாற முயன்றாள். ஆனால் அவளால் அப்படி மாற முடியவில்லை. வேறு ஒருவராக உருமாற, முதலில் அவர்களின் பண்புகளைப் பெற வேண்டும். எவ்வளவோ முயன்றும் அருந்ததியின் பண்புகளை ஸ்வாஹா், பெற முடியவில்லை.

மனம் தளர்ந்த அவள் இறுதியாக அருந்ததியிடம் சென்று, வணங்கித் தோல்வியை ஒப்புக்கொண்டாள். திருமணத்தின்போது கணவனின் கரம் பிடிக்கையில் அருந்ததியைப் பார்க்கும் பெண் நீண்ட காலம் நல்ல இல்லறத்தையும் செல்வத்தையும் அடைவாள் என்றும் வாழ்த்தினாள்.

திருமணச் சடங்கில் அருந்ததியைப் பார்க்கும் பழக்கம் உருவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in