வார ராசி பலன் 11-08-2016 முதல் 17-08-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

வார ராசி பலன் 11-08-2016 முதல் 17-08-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
Updated on
3 min read

மேஷ ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். பயணத்தால் அளவோடு நன்மை ஏற்படும். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு கூடும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு ஏற்படும். 6-ல் குருவும், 8-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். பொருளாதார விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடத்திற்கு மாறினாலும் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 16.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.

‎நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6, 7.‎

பரிகாரம்: அஷ்டமச் சனிக்கு அர்ச்சனை செய்யவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 4-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். நண்பர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர்ப் பொருள்வரவுக்கும் இடமுண்டு. தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பிறருடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது நன்மையளிக்கும். முக்கியஸ்தர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 12, 16.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1 3, 5, 6, 7

பரிகாரம்: முருகனை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புகள் விலகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் வருவாயோ கிடைக்கும். 17-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பந்தயங்களிலும், வழக்கிலும் அனுகூலமான போக்கு தென்படும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 12, 14.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், கருஞ்சிவப்பு.

எண்கள்: 4, 6, 8, 9.

பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும். பெற்றோர் மற்றும் பெரியவர்களிடம் பணிவு தேவை.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லை. நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும் விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 3-ல் குருவும் 5-ல் செவ்வாய், சனி ஆகியோரும் உலவுவதால் மக்கள் நலனில் கவனம் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். செய்தொழில் எதுவானாலும் அதில் முழுகவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 12, 16.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம்.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் வந்து சேரும். தோற்றப்பொலிவு கூடும். செய்தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்பு உருவாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்து வரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பணவரவு கூடும். புதிய சொத்துக்கள் சேரும். மக்களால் மனமகிழ்ச்சி பெருகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல் வாங்கல் இனங்கள் லாபம் தரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சலால் உடல் அசதி அதிகமாகும். சோர்வும் சோம்பலும் ஏற்படும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் 17-ம் தேதி முதல் மந்தநிலை விலகி, முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 11, 16.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: நாக தேவதைகளை வழிபடுவது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல்கேதுவும் 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்ப நலம் சிறக்கும். முயற்சி வீண்போகாது. உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு கூடும். தகவல் தொடர்பு ஆக்கம் தரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப்பணியாளர்களது எண்ணம் ஈடேறும். வியாபாரம், கணிதம், எழுத்து மற்றும் பயணங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 11, 12, 14, 16.

திசைகள்: கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 1, 6, 7, 8, 9.

பரிகாரம்: மகாவிஷ்ணுவையும் துர்க்கையையும் வழிபடுவது நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in