பாவை விளக்கு: ஒரு காதல் சித்திரம்

பாவை விளக்கு: ஒரு காதல் சித்திரம்

Published on

திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்கசுவாமி திருக்கோவிலின் உள்ளே ஒரு 4 அடி உயரப் பாவை விளக்கு உள்ளது. அதன் வரலாறு ஒரு காதல் சித்திரம்.

மராட்டிய மன்னர் அமர் சிங் மகன் பிரதாப் சிங். இவருக்கு இரு மனைவியர். ஆனால் வாரிசு இல்லை. மூன்றாவதாக தன் மாமன் மகள் அம்முனு பாயியைத் திருமணம் செய்ய விரும்பினார். அம்முனு பாயும் அவரை விரும்பினாள். திருமணம் நடந்தால் நேர்த்திக் கடனாய்ப் பாவை விளக்கை அமைப்பதாய் வேண்டிக்கொண்டாள். திருமணம் நடந்தது.

தன் வடிவில் இறைவன் சன்னிதியில் 4 அடி உயரப் பாவை விளக்கை நிறுவினாள். 120 சென்டிமீட்டர் உயரம் உள்ள இந்தப் பாவை விளக்கு 1853ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 412 சேர் எடை உள்ள இந்தச் சிலையை வார்த்தவர் கன்னார அறிய புத்திரபத்தர். இந்த விவரங்கள் சிலையின் பீடத்தின் அடியில் தரப்பட்டுள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in