

துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் உலவுவது சிறப்பாகும். குரு, செவ்வாய், சனி ஆகிய முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. வார முன்பகுதி சாதாரணமாகவே காணப்படும். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். முக்கியஸ்தர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. பயணத்தால் எண்ணம் ஈடேறும். கலைத் துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் சுபசெலவுகள் கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28, 29, 30.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகர், தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடத்திற்கு மாறுவதும் சிறப்பாகும். நல்லவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மருத்துவர்கள் நற்பெயர் பெறுவார்கள். வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலை உயரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 29, 30, 31 (பிற்பகல்).
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு, வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 9.
பரிகாரம்: ஹனுமன் சாலீஸா சொல்வதும் கேட்பதும் நல்லது. சனிப்பிரீதி செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு, செவ்வாய், சனி ஆகிய முக்கியக் கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். எதிர்ப்புகள் இருக்கும். விழிப்புடன் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் சங்கடங்கள் சூழும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத் தெளிவும் நம்பிக்கையும் உண்டாகும். நல்லவர்களின் நட்புறவை வலுப்படுத்திக்கொண்டு அவர்களின் ஆலோசனைகளின்படி செயல்படுவது நல்லது. நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது அவசியமாகும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 31 (பிற்பகல்).
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்கு அர்ச்சனைகள் செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல் வாங்கல் இனங்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். பயணம் நலம் தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். வியாபாரம் பெருகும். கலைத் துறையினருக்கு நல்வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்களால் காரியங்கள் நிறைவேறும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 27 (முற்பகல்), 28 (பிற்பகல்), 29.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8, 9.
பரிகாரம்: நாக பூஜை செய்வது நல்லது. தந்தைக்கும் தந்தை வழி உறவினருக்கும் உதவி செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். விவசாயிகள் வருவாய் கூடப் பெறுவார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கூட்டாளிகளிடம் விழிப்புத் தேவை. குரு 8-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது அவசியமாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 27 (முற்பகல்), 28 (பிற்பகல்), 29, 30.
திசைகள்: தெற்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, கருநீலம்.
எண்கள்: 8, 9 .
பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். மக்கள் நலம் சீராகும். பொருளாதார நிலை உயரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் அனுகூலமான திருப்பமும் வெற்றியும் கிடைக்கும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வு பெற வாய்ப்பு கூடிவரும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டு. வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 28 (பிற்பகல்), 29.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 9
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவவும்