வார ராசி பலன் | 20-03-14 முதல் 26-03-14 வரை - (மேஷம் முதல் கன்னி வரை)

வார ராசி பலன் | 20-03-14 முதல் 26-03-14 வரை - (மேஷம் முதல் கன்னி வரை)
Updated on
3 min read

மேஷம்

உங்கள் ராசிக்கு 11இல் புதன் உலவுவது சிறப்பாகும். சனி 7இல் உலவினாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் உண்டாகும். குரு 3இல் இருந்தாலும் அவரது பார்வைக்குச் சிறப்புண்டு. 7, 9, 11-ஆமிடங்களைக் குரு பார்ப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

சூரியன் 12இல் இருப்பதால் அரசுப்பணியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். மக்களாலும், தந்தையாலும் செலவுகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். ஏற்றுமதி-இறக்குமதி துறைகளைச் சேர்ந்தவர்கள் விழிப்புடன் காரியமாற்றுவது நல்லது. வாரப் பின்பகுதியில் தெய்வ தரிசனம் கிடைக்கும். தர்ம காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26. l திசை: வடக்கு.

எண்: 5. l நிறங்கள்: வெண்மை, பொன் நிறம், சிவப்பு, ஆரஞ்சு.

பரிகாரம்: ராகு, கேதுக்களுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யவும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2இல் குருவும், 6இல் ராகுவும், 9இல் சுக்கிரனும் 10இல் புதனும் 11இல் சூரியனும் உலவுவதால் எதிர்ப்புக்களை வெல்வீர்கள். நல்லவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பண நடமாட்டம் கூடும். வாழ்வில் முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் கூடிவரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். பயணத்தால் நலம் ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். வண்டி, வாகனங்களால் லாபம் கிடைக்கும்.

தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். பேச்சில் திறமை கூடும். புதியவர்களது தொடர்பு பயன்படும். மாதர்கள் நோக்கம் நிறைவேறப் பெறும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்புக் கூடிவரும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள். கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். அரசாங்க காரியங்கள் ஈடேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், நீலம், வெண்மை.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: கணபதியையும், முருகனையும் வழிபடுவது நல்லது.

மிதுனம்

சூரியன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். காரியத்தில் வெற்றி கிட்டும். பணவரவு சீராக இருக்கும். எதிர்பாராத திடீர்ப் பொருள்வரவுக்கும் இடமுண்டு. ஆன்மிகவாதிகளுக்கும் அறநிலையப் பணியாளர்களுக்கும் மதிப்பு உயரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும்.

தந்தையால் நலம் உண்டாகும். இதர கிரகங்களின் நிலை சிறப்பாக இல்லாததால் தாய் நலனில் கவனம் தேவைப்படும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. மார்பு, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

எண்கள்: 1, 6, 7.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 22.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன்.

பரிகாரம்: துர்கையையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும். தன்வந்திரி ஜபம் செய்வது நல்லது.

கடகம்

4இல் வக்கிர சனியும், 8இல் புதனும், 10இல் கேதுவும் உலவுவதால் நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிய முன்வருவார்கள். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரப் பெறுவார்கள். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். 4இல் ராகு இருப்பதால் அலைச்சல் கூடவே செய்யும்.

குரு 12இல் இருப்பதால் பொருளாதார நிலையில் விசேடமான வளர்ச்சிக்கு இடமிராது. மக்கள் முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். திருப்பணிகளுக்காகவும், தர்ம காரியங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். 7இல் சுக்கிரன் இருப்பதால் கணவன் மனைவி உறவு நிலை சீராக இராது. உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவதன் மூலம் பிரச்னைகளுக்கு ஆளாகாமல் மீளலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26.

திசைகள்: வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, மெரூன், சிவப்பு.

எண்கள்: 5, 7.

பரிகாரம்: துர்கை அம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.

சிம்மம்

உங்கள் ராசிக்கு 3இல் ராகுவும், 11இல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பொன்னும் பொருளும் சேரும். பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

மக்களால் நலம் உண்டாகும். செவ்வாயும் சனியும் வக்கிரமாக உலவுவதால் உடன்பிறந்தவர்களது நலனில் கவனம் தேவைப்படும். ராசிநாதன் சூரியன் 8இல் இருப்பதால் உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. தந்தையால் அனுகூ,லமிராது. சுக்கிர பலம் சிறப்பாக இல்லாததால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். ஆடவர்களுக்குப் பெண்டிரால் தொல்லைகள் அதிகமாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

எண்கள்: 3, 4.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, புகை நிறம்.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.

கன்னி

5இல் சுக்கிரனும் 6இல் புதனும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். மக்களால் நலம் உண்டாகும். சிலருக்கு மந்திர உபதேசம் கிடைக்கும்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்குப் புகழும் பொருளும் சேரும். ஜன்ம ராசியில் செவ்வாய் வக்கிரமாக இருப்பதாலும், 2இல் சனி வக்கிரம் பெற்று ராகுவுடன் இருப்பதாலும் குடும்ப நலனில் கவனம் தேவை. 7இல் சூரியனும் 8இல் கேதுவும் இருப்பதால் பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகவும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாரக் கடைசியில் சந்திரன் 5ஆமிடம்மாறி, சுக்கிரனுடன் கூடுவதால் ஓர் அதிர்ஷ்ட வாய்ப்புக் கூடிவரும். பெண்களால் நலம் உண்டாகும்.

எண்கள்: 5, 6.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 20, 26.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை.

பரிகாரம்: செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in