

தன்னலமற்ற போக்கும் வழி நடத்திச் செல்லும் குணமும் கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் கவலைகள் நீங்கும். ஓடிஓடி உழைத்தும் ஒன்றும் ஒட்டவில்லையே என்று நினைத்து ஒதுங்கியிருந்தீர்களே! அந்த தாழ்வு மனப்பான்மை நீங்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகளும் பிரிவுகளும் ஈகோவும் நிலவியதே அந்த நிலை மாறும். ஜூன் 18-ம் தேதி முதல் குரு 5-ம் வீட்டிற்குள் அமர்வதால் கணவன் - மனைவிக்குள் நெருக்கம் அதிகமாகும்.
குழந்தை பாக்கியமும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வருடத்தின் முற்பகுதியில் தாயாரின் உடல்நிலை பாதிக்கப்படும். பிற்பகுதியில் தாயார் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். அவரின் உடல்நிலையும் சீராகும். அஷ்டமத்துச் சனி இருப்பதால் இனிமையாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். செப்டம்பர் மாதத்திலிருந்து வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் உங்கள் அருமையைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள். மகன் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். அவர்கள் உங்களுடைய ஆலோசனைகளை ஏற்று உங்களைப் பின்பற்றத் தொடங்குவார்கள். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள்.
ராகு, கேதுவின் போக்கு சரியில்லாததால் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. சிலர் உங்களை விமர்சித்து வீண் பழி சுமத்திப் பேசினாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. முடிந்தவரை வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகரிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். சிலர் புது தொழில் தொடங்குவீர்கள்.
கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் இருந்த பயம் விலகும். வருடத்தின் பிற்பகுதியில் நீங்கள் எதிர்பார்த்தபடி கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.
வழிபாடு - பகளாமுகி அம்மன்
மதிப்பெண் - ஜனவரி - ஜூன் 50/100, ஜூலை - ஆகஸ்ட் - 45/100, செப்டம்பர் - டிசம்பர் - 85/100