

ஒடிஷா மாநிலத்தில் கடல் கொஞ்சும் சிற்றூர். ‘சார் தாம் ' என்று இந்தியாவில் கருதப்படும் நான்கு புனிதத் தலங்களுள் ஒன்று. தொன்மையில் உஜ்ஜயினி, காசி போன்ற நகரங்களுடன் வரிசைப்படுத்தப்படும் புண்ணிய தீர்த்தம். அதுதான் பூரி. ஜகன்னாதபுரி, புருஷோத்தமபுரி, நீலாசல், க்ஷேத்திரம் என்று பல பெயர்களுடன் அழைக்கப்படும் தலம் இது.
பழைய நகரில் உள்ள குறுகலான தெருக்கள் எல்லாமே கோயில் இருக்கும் திசையை நோக்கித்தான் செல்கின்றன. நடுநாயகமாக இருக்கும் இந்த கோயிலைச் சுற்றித்தான் ஊரே வளர்ந்திருக்கிறது. ஜகன்னாதர் கொலு வீற்றிருக்கும் தெருதான் ஊரிலேயே பெரிய தெரு.
பெயர் படா தண்டா அல்லது க்ராண்ட் ரோடு. உலகப் பிரசித்தி பெற்றதும் லட்சக்கணக்கான மக்களைச் சுண்டி இழுப்பதுமான ரத யாத்திரை இந்தத் தெருவில்தான் நடைபெறுகிறது. ஆதி சங்கரர் இங்கு மடத்தை நிறுவியுள்ளார்.
எட்டு உலோகங்களாலான சுதர்சனச் சக்கரம்
ஜகன்னாதர் கோயில் கோயில், ராஜா அனந்தவர்மன் சோட கங்க தேவ் என்பவனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பின்னர் பலர் ஆளுகைக்கு உட்பட்டுக் கடைசியாக 1803-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் பூரி ராஜாவிடமே வந்து சேர்ந்தது. இன்று வரை அது தொடர்கிறது. கோயிலின் கட்டிடக் கலை ஒரியாவின் கலை மற்றும் சிற்பக் கலையின் உச்சமாகும்.
பூரி கோயிலின் அமைப்பு புவனேஸ்வரின் லிங்கராஜர் கோயிலைப் போலவே த்யுலா, ஜகன்மோகன், நாடக மண்டபம், போக மண்டபம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் இரண்டு பெரிய (20 அடி) மதில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அடுக்கடுக்காய் உள்ள கோபுரத்தின் சிகரத்தில் சுதர்சன சக்கரம் (அஷ்டவது என்ற எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது) உள்ளது. அதன் மேல் பண என்ற கொடி பறக்கிறது. இந்த இரண்டையும் தூரத்திலிருந்து தரிசிப்பது நற்சகுனமாகக் கருதப்படுகிறது.
கோயிலுக்குள் அனைவரும் நுழையும் கிழக்கு வாயிலில் இரு சிங்கங்கள் இருப்பதால் இதற்குச் சிங்கத் துவாரம் என்று பெயர். வாயிலில் இருப்பது 34 அடி உயரமுள்ள 16 பக்கமுடைய செதுக்கப்பட்ட நேர்த்தியான ஒரு கால் தூண். உச்சியில் ஆதவனின் தேரோட்டியாக அருணன். இதன் பெயர் அருண ஸ்தம்பம். கொனார்க்கிலிருந்து 18-ம் நூற்றாண்டு இங்கு கொண்டுவரப்பட்டது. இந்த வாயிலில் நவக்கிரகங்கள் மற்றும் தசாவதார உருவங்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் வெளியிலிருந்து எல்லோரும் காணும்படியாக ஜகந்நாதர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
முக்தி பெற்ற காகம்
அதைத் தாண்டியவுடன் வருவது பைசி பஹாசா எனப்படும் புனித 22 படிகள் (தறிபோது 17 படிகள்தான் உள்ளன). இது சங்கரர் கால் பட்ட இடம். சைதன்யர், கபீர் தாஸ் போன்ற மகான்கள் கடந்து சென்ற படிகள் இவை. மேலே சென்றவுடன் இடது பக்கம் திரும்பினால் கோவில் தல விருட்சம் போல் மிகப் பழமையான ஆல மரம். அதற்கு பின்னால் ரோஹிணி குண்ட் (Rohini Kund )எனப்படும் தண்ணீர் தொட்டி. புராண காலத்தில் ஜகன்னாதர் மேல் பக்தி கொண்ட காகம் ஒன்று அதில் விழுந்து முக்தி பெற்றதாம். அன்றிலிருந்து அந்தத் தடாகம் புனிதமாகக் கருதப்பட்டு, பக்தர்கள் அதன் நீரை தலையில் தெளித்துக்கொள்கின்றனர்.
செல்லும் வழி, தங்குமிடம்
ரயில் மூலம்:
தற்போது சென்னையிலிருந்து வாராந்தரச் சேவை உள்ளது (திங்கட் கிழமைகளில்). கல்கத்தா செல்லும் வண்டிகளில் ஏறி, குர்தா ரோடு சந்திப்பில் இறங்கி எதிர்த் திசையில் வரும் பூரி செல்லும் வண்டியில் ஏறியும் பூரி செல்லலாம்.
ஆகாயம் மூலம்:
அருகிலிருக்கும் விமான நிலையம் புவனேஸ்வர். அங்கிருந்து ஒன்றரை மணி நேரத்தில் பூரியை அடையலாம். பூரியில் கிட்டத்தட்ட 700 மடங்கள் உள்ளன. கோயில் தேவஸ்தான அறைகளும் உள்ளன. அநேகமாக எல்லா மடங்களிலும் தங்கும் அறைகள் உள்ளன. குறைந்த செலவில் ஓட்டல்கள், ரிசார்ட்டுகளும் உள்ளன. அநேகமாக எல்லா ஓட்டல்களும் கடற்கரையை ஒட்டியே உள்ளன.
ரத யாத்திரை
ஆஷாட (ஆடி) மாதத்தின் (ஜூன் -ஜூலை) வளர்பிறையில் இரண்டாவது நாளன்று உலகில் நடக்கும் பிரம்மாண்டமான திருவிழாக்களில் ஒன்றான ரத யாத்திரையில் பங்கேற்பதற்காக லட்சோப லட்சம் மக்கள் கூடுகிறார்கள். மூன்று ரதங்கள் ஒவ்வொரு வருடமும் புதிதாகச் செய்யப்படுகின்றன. ஜகன்னாதரின் ரதம் 16 சக்கரங்களுடன் மிகப் பெரியது. அதன் பெயர் நந்திகோஷ். அடுத்து சுபத்திரையுனைடய பத்மத்வஜா. 12 சக்கரங்கள். பலபத்திரரின் தலத்வஜா ரதத்துக்கு 14 சக்கரங்கள்.
ரதங்கள் குண்டீசா கோவிலில் ஏழு நாட்கள் தங்கியிருக்கும். அந்தச் சமயத்தில் பக்தர்கள் ரதத்தின் மேலேறி இறைவனைத் தொட்டு தரிசிக்கலாம். இங்கு வந்து தரிசனம் செய்தால் 1000 முறை பிரதானக் கோயிலுக்குச் செல்லும் பலன் உண்டாம்.
கோவிலைச் சுற்றியிருக்கும் கட்டிடங் களின் மாடியில் நாற்காலியில் அமர்ந்து ரத யாத்திரையைப் பார்ப்பதற்காக டிக்கெட் போட்டு விற்பனை செய்யப்படுகிறது.
அதைத் தாண்டியவுடன் வருவது பைசி பஹாசா எனப்படும் புனித 22 படிகள் (தறிபோது 17 படிகள்தான் உள்ளன). இது சங்கரர் கால் பட்ட இடம். சைதன்யர், கபீர் தாஸ் போன்ற மகான்கள் கடந்து சென்ற படிகள் இவை. மேலே சென்றவுடன் இடது பக்கம் திரும்பினால் கோவில் தல விருட்சம் போல் மிகப் பழமையான ஆல மரம். அதற்கு பின்னால் ரோஹிணி குண்ட் (Rohini Kund )எனப்படும் தண்ணீர் தொட்டி. புராண காலத்தில் ஜகன்னாதர் மேல் பக்தி கொண்ட காகம் ஒன்று அதில் விழுந்து முக்தி பெற்றதாம். அன்றிலிருந்து அந்தத் தடாகம் புனிதமாகக் கருதப்பட்டு, பக்தர்கள் அதன் நீரை தலையில் தெளித்துக்கொள்கின்றனர்.
பிரதானக் கோயிலைச் சுற்றி 30 கோயில்கள் உள்ளன. இவற்றில் கணேசர், லக்ஷ்மி, விமலா ஆகியவை முக்கியமான கோயில்கள். லஷ்மி கோயிலின் சிற்பக் கலை மிகவும் ரசிக்கத்தக்கது. சக்தி பீடங்களில் ஒன்றான விமலா ஆலயம் உள் பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் உள்ளன.
நான்கு கையுடைய அந்த அரக்குச் சிலையின் கைகளில் அக்ஷய மாலையும் , கலசமும் மனித உருவமும் உள்ளது. மூலவருக்கு அளிக்கப்படும் நைவேத்தியம் விமலா தேவிக்கு அளிக்கப்படுகிறது. ரத யாத்திரைக்கு மூலவர் கோவிலை விட்டு வெளியே இருக்கும் சமயத்தில் விமலா தேவிதான் அவருடைய இருப்பிடத்தைக் காவல் காக்கிறாள்.
கருவறைக்குள் நுழைவதற்குப் படிகள். கோயில் விமானமே ஒரு பெரிய மேடையின் மேல் 215 அடி உயரத்திற்கு எழும்பியிருக்கிறது. உள்ளே பெரிய பெரிய கண்களுடன் மரத்திலான மூன்று உருவங்கள். நான்கு அடி உயர ரத்ன சிம்மாசனத்தின் மேல் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். பலபத்திரர் .
சுபத்திரை, ஜகன்னாதர். கூடவே லக்ஷ்மி, சரஸ்வதி. நீட்டிய கரங்களுடன் ‘வா என்னிடம் ' என்று வாஞ்சையுடன் அழைக்கும் பரந்தாமன். சன்னதியில் ஓங்கி ஒலிக்கும் ஜகன்நாதா என்ற பக்தர்களின் கோஷம் மெய்சிலிர்க்க வைத்துப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகிறது.