வார ராசி பலன் 21-07-2016 முதல் 27-07-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

வார ராசி பலன் 21-07-2016 முதல் 27-07-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)
Updated on
3 min read

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும், 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பு. தொழில்நுட்பத் திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். தெய்வானுக்கிரகம் உண்டாகும். பணப் புழக்கம் கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பயணம் சார்ந்த இனங்கள் ஆக்கம் தரும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். எதிரிகள் அடங்குவார்கள். அரசாங்க உதவி கிடைக்கும். தந்தையால் நலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் வருமானம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.

திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 3, 4, 5.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். பெண்களின் நிலை உயரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு கூடும். ஜன்ம ராசியில் செவ்வாயும்; சனியும், 4-ல் கேதுவும் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்குப் பிரச்சினைகள் சூழும். 24-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.

திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: வெண்மை, இள நீலம், வெண்சாம்பல் நிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: ஜன்மச் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. விநாயகர், ஆஞ்சநேயரைத் தொடர்ந்து வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் புதனும் சுக்கிரனும், 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் கூடும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும் . கலைஞர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறப் பணியாளர்களின் நோக்கம் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். 8-ல் சூரியனும், 12-ல் செவ்வாய்; சனி உலவுவதால் உடல்நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைப்பது நல்லது. வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.

திசைகள்: வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 11-ல்செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பு. அந்தஸ்தும் மதிப்பும் உயரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சட்டம், காவல், ராணுவம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துகள் சேரும். பொது நலப் பணிகளில் ஆர்வம் கூடும். பூமியிலிருந்து வெளிவரும் பொருட்கள் லாபம் தரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்ப நலனில் கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். விட்டுக் கொடுப்பது நல்லது. மக்கள் நலனில் அக்கறை தேவை. பொருள் கொடுக்கல் வாங்கலில் விழிப்பு அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.

திசைகள்: மேற்கு, தெற்கு.

நிறங்கள்: கரு நீலம், சிவப்பு.

எண்கள்: 8, 9.

பரிகாரம்: விநாயகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவு தேவை.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும், 7-ல் குருவும், 10-ல் செவ்வாய்; சனி உலவுவது சிறப்பு. நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். தொழில்நுட்பத் திறமை கூடும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். பணப் புழக்கம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். வாரப் பின்பகுதியில் வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சி காண்பார்கள். சுக்கிரன் 6-ல் இருப்பதாலும், ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகு உலவுவதாலும் வாழ்க்கைத் துணைவரால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 22, 24, 25.

திசைகள்: வடக்கு, வட கிழக்கு, தெற்கு, கிழக்கு.

நிறங்கள்: பச்சை, பொன் நிறம், சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 8, 9.

பரிகாரம்: ஏழைப் பெண்களுக்கும், சுமங்கலிகளுக்கும் உதவி செய்யவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. கலைஞானம் பிரகாசிக்கும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவி வரும். திரவப்பொருட்கள் லாபம் தரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மக்களாலும் தந்தையாலும் பிரச்சினைகள் சூழும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. 24-ம் தேதி முதல் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 24 (பிற்பகல்), 25.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், புகைநிறம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. பெரியவர்களிடம் நல்வாழ்த்துக்களைப் பெறவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in