Published : 15 Mar 2014 01:15 PM
Last Updated : 15 Mar 2014 01:15 PM

வார ராசி பலன் | 13-03-14 முதல் 19-03-14 வரை - (துலாம் முதல் மீனம் வரை)

துலாம்

குரு, சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் நலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பண நடமாட்டம் அதிகமாகும். முயற்சி வீண்போகாது. தெய்வப் பணிகள் நிறைவேறும்.

பல வழிகளில் பணம் வந்து சேரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். சொத்துக்களும் பொருட்களும் சேரும். 15 முதல் சூரியன் 6ஆமிடம் மாறுவதால் அரசுப் பணிகள் ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 19.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்யவும். ஆஞ்சநேயரை வழிபடவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.



விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாய் 11ஆமிடத்திலும் சுக்கிரன் 3இலும், புதன் 4இலும் கேது 6இலும் உலவுவது சிறப்பாகும். தான, தர்மப் பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடுகூடும். குடும்ப நலம் சீராக இருந்துவரும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். மாணவர்கள் நிலை உயரும். ஆன்மிகவாதிகள் மதிப்பு உயரப் பெறுவார்கள்.

சனி 12இல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். பொருளாதார நிலையில் வளர்ச்சிக்கு வழி பிறக்கும். 4இல் சூரியனும் 12இல் ராகுவும் இருப்பதால் அலைச்சல் இருக்கும். 15 முதல் சூரியன் 5ஆமிடம் மாறுவதும் குரு 8இல் இருப்பதும் சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16, 18. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு.

எண்கள்: 5, 6, 7, 9.

பரிகாரம்: குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது. துர்கைக்கு நெய்தீபம் ஏற்றவும்.



தனுசு

உங்கள் ராசிக்கு 2இல் சுக்கிரனும் 3இல் சூரியனும், 7இல் குருவும் 10இல் செவ்வாயும், 11இல் சனி, ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். மன உற்சாகம் பெருகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும்.

பேச்சில் இனிமை கூடும். முக வசீகரம் கூடும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் வந்து சேரும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை. தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். 15 முதல் சூரியன் 4ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16 (பிற்பகல்), 18, 19.

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை, ரோஸ்.

எண்கள்: 1, 3, 4, 6, 8, 9.

பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது. விநாயகரை வழிபடவும். ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யவும்.



மகரம்

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2இல் புதனும் 10இல் ராகுவும் இருப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களால் அனுகூலம். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைஞர்களுக்குப் புகழோடு, பொருளும் சேரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். கணிதம், பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் உயருவார்கள்.

சூரியன், வக்கிர செவ்வாய், குரு, வக்கிர சனி, கேது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பெற்றோர் நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவை. 15 முதல் சூரியன் 3ஆமிடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18, 19.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, கறுப்பு.

எண்கள்: 4, 5, 6.

பரிகாரம்: விநாயகரையும், சுப்பிரமணியரையும் வழிபடவும். குடும்பப் பெரியவர்களையும், குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும், வேத விற்பன்னர்களையும் வணங்கவும்.



கும்பம்

3இல் கேதுவும், 5இல் குருவும், 12இல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு உங்கள் ஜன்ம ராசியையும், 9, 11ஆம் இடங்களையும் நேர் கதியில் பார்ப்பதால் உடல் நலம் சீராகும். மனத்தில் தெளிவும் நம்பிக்கையும் பிறக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொருளாதார நிலையில் வளர்ச்சி. அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். தெய்வ தரிசனம் கிட்டும். புத்திசாலித்தனம் பிரகாசிக்கும்.

ஆன்மிகம், அற நிலையத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் நிலை உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். 8இல் வக்கிர செவ்வாயும், 9இல் வக்கிர சனியும் இருப்பதால் சகோதர நலனிலும் தந்தை நலனிலும் அக்கறை தேவைப்படும். 15ஆம் தேதி முதல் சூரியன் 2ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. பேச்சில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16 (பிற்பகல்), 18.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: மெரூன், பொன் நிறம், நீலம்.

எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. பதற்றப்படாமல் நிதானமாகச் செயல்படவும்.



மீனம்

உங்கள் ராசிக்கு 11இல் சுக்கிரன் உலவுவது மட்டுமே சிறப்பாகும். கலைத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை. மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.

அக்கம்பக்கத்தாரால் தொல்லைகள் சூழும். 15 முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. உடல் நலனில் கவனம் தேவை. தலை, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஜனன கால ஜாதகம் வலுத்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 16 (பிற்பகல்), 18.

திசை: தென்கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை.

எண்: 6.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். நவக்கிரகங்களுக்குரிய காயத்ரி சொல்லவும். கெட்டவர்களின் தொடர்பை விட்டு விலகி, நல்லவர்களின் நட்புறவை நாடிப் பெறவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x