

மேஷம்
உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன் உலவுவதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சனி 7-ல் வக்கிரமாக இருப்பதாலும், நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டு கொண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும்.
இயந்திரப் பணிகள் லாபம் தரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை ஆதாயம் தரும். கணவன் மனைவியிடையே கருத்து ஒற்றுமை ஏற்படும். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் தகுதிக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். மக்களாலும் தந்தையாலும் அளவோடு நலம் உண்டாகும். தாய் நலனில் கவனம் தேவைப்படும்.
ஜன்ம ராசியில் சூரியனும் புதனும் கேதுவும் இருப்பதால் தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 17 (முற்பகல்), 20, 21. l திசைகள்: தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, சிவப்பு. l எண்கள்: 6, 9.
பரிகாரம்: தினமும் காலை வேளையில் சிறிது நேரம் த்யானம், யோகா செய்வது நல்லது. சக்தி வழிபாடு நலம் தரும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேறுவீர்கள். பேச்சிலும் செயலிலும் வேகம் கூடும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரால் அனுகூலம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.
5-ல் வக்கிர செவ்வாயும், 6-ல் வக்கிர சனியும் இருப்பதால் மக்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவை. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் நஷ்டப்படாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டு, விநோதங்களைத் தவிர்க்கவும். இடது கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 20. l திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: பொன் நிறம், நீலம். l எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். கண் தெரியாதவர்களுக்கு உதவி செய்யவும்.
மிதுனம்
சூரியன், புதன், சுக்கிரன், கேது ஆகி யோர் அனுகூலமாக உலவுவதால் உங்கள் நிர்வாகத் திறமை கூடும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். வியாபாரம் பெருகும். நிலம், மனை, வீடு, வாகனம் ஆகிய சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.
தந்தையால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். கலைஞர்களது நிலை உயரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 4-ல் வக்கிர செவ்வாயும், 5-ல் வக்கிர சனியும் உலவுவதால் தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 20. l திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, இள நீலம், வெண்மை, மெரூன். l எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: முருகனுக்கும் ஆஞ்சநேயருக்கும் துர்கைக்கும் அர்ச்சனை செய்வது நல்லது. தன்வந்தரி ஜபம் செய்வதன் மூலம் உடல்நலம் சீராகும்.
கடகம்
3-ல் வக்கிர செவ்வாயும், 4-ல் வக்கிர சனியும், 8-ல் சுக்கிரனும், 10-ல் சூரியன், புதன் கேது ஆகியோரும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள்.
நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களும், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களும் முன்னணிக்கு உயருவார்கள். பொருளாதார நிலை உயரும். மேலதிகாரிகளின் நல்லெண்ணங்களுக்கு உரியவராவீர்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். மாணவர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.
குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 18, 20. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 7, 9.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியையும், துர்கை அம்மனையும் வழிபடவும். வேதம் படிப்பவர்களுக்கும், படித்தவர்களுக்கும் உதவி செய்யவும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும்,9-ல் சூரியனும் 11-ல் குருவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.
பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். 2-ல் வக்கிர செவ்வாயும், 3-ல் வக்கிர சனியும் உலவுவதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். கோபத்தைக் குறைத்துக் கொண்டு, பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணமுடியும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். மக்களால் மனமகிழ்ச்சி கூடும்.
திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். குரு உபதேசம் கிடைக்கும். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 18, 20. l திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, புகை நிறம். l எண்கள்: 1, 3, 4.
பரிகாரம்: முருகனை வழிபடவும்.
கன்னி
கோசாரப்படி கிரகநிலை சிறப்பாக இல்லாததால் எக்காரியத்திலும் பதற்றப் படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பயணத்தின் போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. மின்சாரம், எரிபொருள், ஆயுதம், மற்றும் கூர்மையான பொருட்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். பேச்சில் நிதானம் தேவை.
குடும்பத்தாரிடம் சுமுகமாகப் பழகவும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருக்க, சகிப்புத் தன்மை அவசியம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டிவரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். நெருங்கிய நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அரும்பாடுபட வேண்டிவரும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்படவும் நேரலாம். ஜனன கால ஜாதகத்தில் அடிப்படை பலம் இருக்குமாயின் கவலைப்படத் தேவையில்லை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 20. l திசை: வடக்கு.
நிறம்: பச்சை, பிரெளன், ரோஸ். l எண்: 5.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் தரும். திருமாலையும் மகாலட்சுமியையும் வழிபடுவது நல்லது.