Published : 26 Jun 2014 04:17 PM
Last Updated : 26 Jun 2014 04:17 PM

வார ராசி பலன் 26-6-2014 முதல் 02-07-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம்

துலாம் ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். மாணவர்கள் நிலை உயரும். மாதர்கள் எண்ணம் நிறைவேறும்.

கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் இனிமை கூடும். வசீகரச் சக்தி பிறக்கும். நண்பர்கள், உறவினர்கள் தொடர்பு நலம் தரும்.

புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபடுவீர்கள். தந்தையாலும் வாழ்க்கைத் துணையாலும் அளவோடு நலம் ஏற்படும்.

12-ல் செவ்வாயும் ராகுவும் உலவுவதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். சகோதர நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, வெண்மை, இளநீலம்.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: துர்கை, சுப்பிரமணியரை வழிபடவும்.



விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் ராகுவுடன் உலவுவது விசேஷமாகும். குரு 9-ல் இருப்பது குறிப்பிடத்தக்கது. நல்லவர்கள் உதவுவார்கள். நற்பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்ப்புக்கள் விலகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் சாதனை புரிவார்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். குடும்பத்தில் குதூகலம் கூடும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். வாரப் பின்பகுதியில் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, வெண்சாம்பல் நிறம்.

எண்கள்: 3, 4, 9.

பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருத்யம் சொல்லவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும், 10-ல் செவ்வாயும் ராகுவும் 11-ல் சனியும் உலவுவதால் எதிரிகள் அடங்குவார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும்.

நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். சமுதாய நலப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

4-ல் கேதுவும், 6-ல் சுக்கிரனும், 7-ல் சூரியனும் 8-ல் குருவும் இருப்பதால் உடல்நலனில் அக்கறை தேவை. விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மக்களால் மன அமைதி குறையும்.

கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதி: ஜூலை 2.

திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை.

எண்கள்: 4, 5, 8, 9.

பரிகாரம்: குரு, சுக்கிரனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. சுமங்கலிப் பிரார்த்தனை செய்யவும். மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்லவும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் 7-ல் குருவும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பு. மனத்தில் உற்சாகம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.

மக்களாலும் வாழ்க்கைத் துணையாலும் நலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.

புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அரசியல், நிர்வாகம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெரியவர்கள், தனவந்தர்களின் தொடர்பு நலம் தரும்.

பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். பக்தி மார்க்கத்திலும், ஞான மார்க்கத்திலும் தெளிவு பிறக்கும். எதிரிகள் அடங்குவார்கள். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தந்தையால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30.

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 5, 6, 7.

பரிகாரம்: துர்கை, முருகரை வழிபடவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும் உலவுவதால் நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதியஆடை, அணிமணிகள் சேரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

மாணவர்களது திறமை வெளிப்படும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.

5-ல் சூரியனும் 6-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலனில் கவனம் தேவை. 8-ல் செவ்வாய், ராகு உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்.

எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபடலாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, இளநீலம், வெண்மை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: நவக்கிரகங்களில் குரு, செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியம். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்கவும். எதிலும் வேகத்தைக் குறைக்கவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 5-ல் குருவும் இருப்பதால் தோற்றப்பொலிவு கூடும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடும்.

மாதர்களது எண்ணம் நிறைவேறும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபடுவீர்கள். சுப காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்கள், கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும்.

ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 3-ல் புதனும், 4-ல் சூரியனும், 7-ல் செவ்வாய், ராகு ஆகியோரும் 8-ல் சனியும் இருப்பதால் உடல்நலம் சீராக இருக்காது.

வியாபாரிகளுக்கு விழிப்புத் தேவை. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 29, 30, ஜூலை 2.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 3, 6.

பரிகாரம்: நாகரை வழிபடவும். சூரியனுக்கும் சனிக்கும் அர்ச்சனை செய்யவும். மாற்றுத்திறனாளிகள், ஏழை மாணவர்களுக்கு உதவவும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x