

துலாம்
சூரியன், புதன், குரு, சுக்கிரன் நிலை சிறப்பாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். முக்கியப் பதவி, பட்டங்கள் தேடிவரும். நிர்வாகத் திறமை கூடும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். புதிய முயற்சிகள் பலன் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் ஆதாயம் உண்டு. ஜலப்பொருட்கள் லாபம் தரும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களின் விருப்பங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள், தந்தையால் நலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். 14-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 12, 16. திசை: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறம்: இளநீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம், ஆரஞ்சு. எண்: 1, 3, 5, 6.
பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்யவும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றவும். துர்கை, விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றுவது நல்லது.
விருச்சிகம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்திலும் சுக்கிரன் 4-லும், கேது 6-லும் உலவுவது சிறப்பு. சனி 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். சந்திரன் 14-ம் தேதிவரை அனுகூலமாக உலவுகிறார். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். மதிப்பு, அந்தஸ்து உயரும். உடல்நலம் சீராகும். சுகம் கூடும். கேளிக்கை, உல்லாசங்கள், விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகள் மற்றும் நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். 14-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 6-ம் இடம் மாறுவதால் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். பணவரவு கூடும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். 15, 16 தேதிகளில் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 13, 14. திசை: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறம்: இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு. எண்: 1, 6, 7, 9.
பரிகாரம்: குருவுக்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.
தனுசு
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன், 4-ல் புதன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய், 11-ல் சனி, ராகு உலவுவதால் பொருளா தார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். தெய்வ தரிசனம் கிடைக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். மதிப்பு, அந்தஸ்து உயரும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும். 14-ம் தேதி முதல் சூரியனும் புதனும் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் பிள்ளைகளால் நலம் கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். குரு உபதேசம் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 13, 14, 16. திசை: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
நிறம்: நீலம், சிவப்பு, பொன் நிறம். எண்: 3, 4, 5, 6, 8, 9.
பரிகாரம்: கணபதிக்கு அருகம்புல் மாலை அணிவித்து வணங்கவும். விநாயகர் அகவல் படிக்கவும்.
மகரம்
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 10-ல் ராகு உலவுவதால் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். கணவன் மனைவி இடையே பரஸ்பரம் அனுகூலம் உண்டு. கூட்டாளிகள் சாதகமாக இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்கள், கேளிக்கை, உல்லாசங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பணப் புழக்கம் கூடும். குடும்பத்தாரால் அனுகூலம் உண்டு. 14-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் ஆக்கம் தரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 13, 14, 16. திசை: தென்மேற்கு, கிழக்கு.
நிறம்: இளநீலம், வெண்மை, கருப்பு, ஆரஞ்சு. எண்: 1, 4, 6.
பரிகாரம்: விநாயகரையும் முருகப் பெருமானையும் வழிபடவும். ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்யவும். .
கும்பம்
உங்கள் ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 3-ல் கேது, 5-ல் குரு உலவுவதால் எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். கணவன் மனைவி இடையே பரஸ்பரம் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். ஆன்மிகப் பணிகள் நிறைவேறும். பணப் புழக்கம் அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். கலைத்துறை ஊக்கம் தரும். 14-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடம் மாறுவதால் அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்களின் நோக்கம் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். புதன் 3-ம் இடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களால் மன அமைதி கெடும்.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 12, 16. திசை: வடகிழக்கு, வடமேற்கு.
நிறம்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை. எண்: 3, 5, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், சனீஸ்வரனுக்கு பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியம். கந்தசஷ்டி கவசம் படிக்கவும். ஹனுமன் சாலீஸா சொல்லவும்.
மீனம்
உங்கள் ராசிக்கு 12-ல் சுக்கிரன் உலவுவதும் சந்திரன் வார முன்பகுதியில் அனுகூலமாக உலவுவதும் குறிப்பிடத் தக்கது. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். ஜென்ம ராசியில் சூரியன், புதன் இருப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. 2-ல் கேது, 8-ல் வக்கிர சனி, ராகு உலவுவதால் அந்நியர்களால் பிரச்சினைகள் ஏற்படும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். பயணத்தால் அனுகூலம் இருக்காது. 14-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடம் மாறுவதால் கண், வாய், பல், முகம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புதன் மாற்றத்தால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டு. 15, 16 தேதிகளில் எதிலும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 13, 14. திசை: தென்கிழக்கு.
நிறம்: இளநீலம், வெண்மை. எண்: 6.
பரிகாரம்: கணபதி, நவக்கிரக ஜப, ஹோமம் செய்வது நல்லது. மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கலாம். அன்னதானம் செய்யலாம்.