

இனம், மொழி, மதம் பார்க்காமல் அனைவருக்கும் உதவுபவர்களே! உங்களுடைய ராசியிலேயே சனியும் ராகுவும் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வேலைச்சுமை அதிகமாகிக்கொண்டே போகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. எளிய உடற்பயிற்சிகளும் இந்த வருடம் முழுக்க தேவைப்படுகிறது. வாயுப் பதார்த்தங்கள், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஆனால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரனும் புதனும் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறந்திருப்பதால் கடந்த ஆண்டு ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். திட்டவட்டமான முடிவுகளை இந்த ஆண்டில் எடுப்பீர்கள். ஏமாந்த தொகையும் கைக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தள்ளிப்போன வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும். வீடு மாறுவீர்கள். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்கவேண்டி வரும். கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். ஈகோ பிரச்சினை, மனக்கசப்பால் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்றுசேருவீர்கள்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருடத்தின் முற்பகுதியில் பிள்ளைகளால் மகிழ்ச்சியடைவீர்கள். ஆனால் ஆகஸ்ட் மாதம் வரை செவ்வாயின் போக்கு சரியில்லாததால் சொத்துப் பிரச்சினை தலைதூக்கும். சொத்து வாங்கும்போதும் விற்கும்போதும் சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திடும்போதும் எச்சரிக்கையாக இருங்கள். சகோதர உறவுகளுடன் பகைமை வந்துபோகும். மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். செப்டம்பர் மாதம் முதல் செல்வாக்கு கூடும்.
மனைவியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், கட்டுமான வகைகளால் லாபம் உண்டு. ஜூன் 18-ம் தேதி முதல் குரு உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் சென்று அமர்வதால் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். பிள்ளைகளிடமும் உங்களுடைய கோபத்தை காட்ட வேண்டாம். வியாபாரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் ஆதாயம் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். பற்று வரவு கூடும். உத்தியோகத்தில் வருடத்தின் முற்பகுதியில் பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சம்பளமும் எதிர்பார்த்தபடி வரும். ஆனால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வேலைச்சுமை அதிகமாகிக்கொண்டே போகும். செப்டம்பர் மாதம் முதல் உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும்.
வழிபாடு - மயில் மீது அமர்ந்திருக்கும் முருகன்
மதிப்பெண் - ஜனவரி - ஜூன் - 65/100, ஜூலை - டிசம்பர் - 70/100