Published : 28 Dec 2016 11:27 AM
Last Updated : 28 Dec 2016 11:27 AM

வார ராசிபலன் 29-12-2016 முதல் 4-1-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் சிலருக்கு இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். அரசாங்கப் பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு அதிகரிக்கும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.

நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிய முன்வருவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். 5-ல் செவ்வாயும் கேதுவும் 12-ல் குருவும் இருப்பதால் மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கெட்ட பழக்கவழக்கங்களுக்கு இடம் தரலாகாது. 30-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடத்திற்கு மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), ஜனவரி 1, 2, 4.

திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 4, 5, 6.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். ஜன்ம ராசியில் புதனும் சனியும், 4-ல் செவ்வாய், கேதுவும் உலவுவதால் உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது.

நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். குரு பலம் இருப்பதால் எதையும் சமாளிக்கும் சக்தியும், புத்திசாலித்தனமும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடத்திற்கு மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), ஜனவரி 1, 2, 4.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், இளநீலம்.

எண்கள்: 3, 4, 6.

பரிகாரம்: செவ்வாய், கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். ஜன்மச் சனிக்கு பிரீதி செய்வதும் அவசியமாகும். ஹனுமனை வழிபடவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டி, பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிட்டும். வழக்கு வியாஜ்ஜியங்களில் அனுகூலமான திருப்பத்தைக் காணலாம். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

பொறியாளர்கள் நிலை உயரும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனத்தில் துணிவு பிறக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். ஜன்ம ராசியில் சூரியனும், 12-ல் புதன், சனியும் உலவுவதால் உஷ்ணாதிக்கம் கூடும். வியாபாரிகள் விழிப்புடன் இருந்தால் நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம். தொழிலாளர்கள், விவசாயிகள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடத்திற்கு மாறுவதால் உடன்பிறந்தவர்களால் அளவோடு நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), ஜனவரி 1, 2, 4.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 6, 7, 9.

பரிகாரம்: விரயச் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் புதனும் சனியும் உலவுவதால் வசீகர சக்தி உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். மாதர்களுக்கு உற்சாகம் பெருகும். பொருளாதார நிலை திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழிபிறக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.

பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். 2-ல் செவ்வாயும் கேதுவும், 12-ல் சூரியனும் இருப்பதால் வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், இயந்திரப்பணியாளர்கள், பொறியாளர்கள் பொறுப்புடன் காரியமாற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடத்திற்கு மாறுவதால் பண வரவு மேலும் கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 1, 2, 4.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், பொன் நிறம், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 8.

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது. நாகர் வழிபாடு செய்யவும்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், சனி ஆகியோரும், 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசாங்கத்தின் மூலம் எதிர்பார்த்திருந்த உதவி வார முன்பகுதியில் கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகள் ஆக்கம் தரும்.

கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஜன்ம ராசியில் செவ்வாயும், கேதுவும் உலவுவதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். குரு, 8-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்பு தேவை. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். மக்களால் மன வருத்தம் உண்டாகும். குடும்பப் பெரியவர்களிடம் பணிவோடும் அன்போடும் நடந்து கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), ஜனவரி 2, 4.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்: நாகரை வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் சூரியனும் 11-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். வார முன்பகுதியில் பண நடமாட்டம் அதிகரிக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். நல்லவர்கள் நண்பர்கள் ஆவார்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி பெறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். வாரப் பின்பகுதியில் சந்திரன் 12-ம் இடத்திற்கு மாறுவதாலும் செவ்வாய், கேது ஆகியோருடன் கூடுவதாலும் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் செலவுகளும் சங்கடங்களும் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவது நல்லது என்றாலும் செவ்வாய், கேது ஆகியோருடன் கூடுவதால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பதுடன், வீண் செலவுகளைத் தவிர்ப்பதும் அவசியமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 29 (முற்பகல்), ஜனவரி 1.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், ஆரஞ்சு, இளநீலம்.

எண்கள்: 1, 3, 4, 6.

பரிகாரம்: சுப்பிரமணியரையும் விநாயகரையும் வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x