வார ராசிபலன் 18-09-2014 முதல் 24-09-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

வார ராசிபலன் 18-09-2014 முதல் 24-09-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)
Updated on
3 min read

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சுக்கிரன் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பண வரவு கூடும். தொலைதூரத் தொடர்பால் ஓரளவு அனுகூலம் ஏற்படும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புக்கள் கூடிவரும். பிரச்சினைகள் குறையும். குடும்ப நலம் சீராகும். வாழ்க்கைத்துணையால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.

12-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் உலவுவதால் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். சிக்கன நடவடிக்கை தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புடன் இருக்கவும். வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. தந்தை நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றம் தடைப்படும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான நாள்: செப்டம்பர் 18.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: துர்கை, திருமாலை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது நல்லது. தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே குரு பார்வையுடன் உலவுவதாலும், சூரியன், புதன், ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இருப்பதாலும் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். மற்றையோர் உங்களைப் போற்றிப் புகழுவார்கள். எதிர்ப்புக்கள் விலகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

சாதுக்கள், மகான்கள் தரிசனம் கிடைக்கும். தனவந்தர்களது ஆதரவைப் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்கள் லாபம் தரும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் பெருகும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் வளர்ச்சி பெறும். பெற்றோரால் மக்களுக்கு அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 21, 24 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடவும். கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவுவது நல்லது.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 11-ல் சனி சஞ்சரிப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண வாய்ப்புக்கள் கூடிவரும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் ஏற்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு கூடும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும். உழைப்பு வீண்போகாது.

தொழிலாளர்களது கோரிக்கைகளில் சில இப்போது நிறைவேறும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புக்கள் கைகூடும். பெண்கள் நிலை உயரும். மாணவர்களது திறமை பளிச்சிடும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். 4-ல் கேது, 8-ல் குரு, 12-ல் செவ்வாய் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 24 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, புகை நிறம், இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 4, 5, 6, 8.

பரிகாரம்: விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகனை தொடர்ந்து வழிபடவும். அந்தணர்களுக்கும் வேதம் படித்தவர்களுக்கும் உதவவும். தாயாருக்கும் தாய் வழி உறவினர்களுக்கும் உதவவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 7-ல் குரு, 8-ல் சுக்கிரன், 9-ல் புதன், 10-ல் சனி, 11-ல் செவ்வாய் உலவுவதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும்.

உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களது நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். திறமை வீண்போகாது. மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். நல்லவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு தெளிவு பிறக்கும். தந்தை நலனில் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 21 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், மெரூன், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் தரும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதன், 10-ல் செவ்வாய் உலவுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிரிகள் விலகிப் போவார்கள். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். சொத்துக்கள் சேரும். சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை புரிந்து விருதுகளையும் பரிசுகளையும் பெறுவார்கள். மாணவர்களது நிலை உயரும்.

சூரியன், குரு, சுக்கிரன், ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். கண், மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். பெரியவர்கள், மேலதிகாரிகள், ஆகியோரது அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அரசியல், நிர்வாகம், கலை, மருத்துவம் சம்பந்தமான துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புணர்ந்து காரியமாற்றுவது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பிள்ளைகள் நலனிலும் வாழ்க்கைத் துணையின் நலனிலும் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 21.

திசைகள்: வடக்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, சிவப்பு.

எண்கள்: 5, 9.

பரிகாரம்: குருப் பிரீதி செய்து கொள்ளவும். நாகரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் குரு 5-ம் இடத்தில் தன் உச்ச ராசியில் உலவுவதாலும் அவரது பார்வை 9, 11, மற்றும் ஜன்ம ராசிக்கும் பதிவதாலும் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் அனுகூலம் உண்டாகும். பணவரவு கூடும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைத்துவரும். சூரியன், புதன், சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.

கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் எதிர்ப்புக்கள் கூடும். தொழிலாளர்கள் அதிகம் பாடுபட வேண்டிவரும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. ஆடவர்களுக்குப் பெண்டிரால் அவமானமும் பொருள் இழப்பும் உண்டாகும். எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: செப்டம்பர் 18, 24 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 9.

பரிகாரம்: நாகர் வழிபாடு அவசியமாகும். ஏழை, எளியவர்களுக்கு உதவவும். சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாகத் தருவது நல்லது. அனுமான் சாலீஸா படிக்கவும். கேட்கவும் செய்யலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in