

துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் 5-ல் சுக்கிரனும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். பணவரவு சற்று அதிகரிக்கும். எதிர்ப்புக்களைச் சமாளிப்பீர்கள். திரவப்பொருட்கள் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பேச்சில் திறமை கூடும். நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். போக்குவரத்துத் துறை லாபம் தரும். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவு லாபம் தரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். அரசுப் பணியாளர்களது நிலை உயரும். மின்னணு, கணிப்பொறித் துறையில் ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு கூடும். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 10 (இரவு).
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், இளநீலம், ஆரஞ்சு, பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: குரு, விநாயகரை வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மனத்தில் உற்சாகம் பிறக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். காரியத்தில் வெற்றி கிட்டும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும்.
நல்லவர் அல்லாதவர்களை இனங்கண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. தெய்வப் பணிகள் ஈடேற வழிபிறக்கும். பயணத்தால் ஒரு காரியம் நிறைவேறும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பொன்னும் பொருளும் சேரும். நீண்ட நாள் எண்ணம் ஈடேறும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 9, 10 (முற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், இளநீலம்.
எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். புதிய சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். நண்பர்கள் நலம் புரிய முன்வருவார்கள். தாய் நலம் சீராக இருந்துவரும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.
தர்ம குணம் வெளிப்படும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகள் ஆகியவற்றில் வெற்றி கிடைக்கும். ஜன்ம ராசியில் சூரியனும், 12-ல் புதன், சனியும் உலவுவதால் உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பொருள் கொடுக்கல் வாங்கலில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 9, 10.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 6, 7, 9.
பரிகாரம்: சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் புதனும் சனியும் உலவுவது நல்லது. பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் அதிகமாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். திரவப் பொருட்கள் ஆதாயம் கொண்டுவரும். சூரியன், செவ்வாய், ராகு, கேதுவின் நிலை சிறப்பாக இல்லாததால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 9, 10.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: நாகரை வழிபடவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 10-ல் புதன், சனி ஆகியோரும், 11-ல் சூரியனும் உலவுவதால் புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி இருந்துவரும். குடும்பத்தில் அமைதி காணலாம். பேச்சில் திறமை வெளிப்படும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் ஓரிரு நன்மைகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
தொழிலாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. அரசு உதவி கிடைக்கும். முக்கியப் பதவி, பட்டங்கள் சிலருக்கு தாமாகவே வந்து சேரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் உங்களுக்கு உதவுவார்கள். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 9, 10.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 8.
பரிகாரம்: விநாயகரையும் துர்க்கையையும் வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 7-ல் குருவும் 10-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆதரவைப் பெறுவீர்கள். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பண வரவு அதிகமாகும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும் என்றாலும் சமாளித்து வருவீர்கள். தகவல் தொடர்பு பயன்படும். கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். எதிர்ப்புக்களும் குறுக்கீடுகளும் விலகும். பயணத்தால் நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 5 (முற்பகல்), 9, 10.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், ஆரஞ்சு, இளநீலம்.
எண்கள்: 1, 3, 4, 6.
பரிகாரம்: சுப்பிரமணியரையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.