

துலாம் ராசி வாசகர்களே
குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். இதனால் எதிர்ப்புகள் குறையும். பொருள்வரவு கூடும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் உண்டாகும். பெண்களின் நிலை உயரும். அலுவலகப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். மருத்துவர்களது நோக்கம் நிறைவேறும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். வார முன்பகுதியில் பயணத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். 12 ம் தேதி முதல் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். 14-ம் தேதி முதல் அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்களுக்குச் செழிப்பான பாதை தெரிய வரும். இதுவரை எதிரியாக இருந்தவர், இப்பொழுது மனம் மாறி உதவுவார். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 10, 11.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், கருப்பு.
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் நலம் புரியும் நிலையில் உலவுகிறார்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் ஏற்படும். அயல் நாட்டவரால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். பயணத்தால் ஒரு காரியம் நிறைவேறும். கணிதம், எழுத்து, பத்திரிக்கை, விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் நிலை உயரப் பெறுவார்கள். 12 ம் தேதி முதல் புதனும், 14 ம் தேதி முதல் சூரியனும், 5 ம் இடம் மாறுவது சிறப்பாகாது. உடல் நலனில் கவனம் தேவை. மகன் அல்லது மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரைத் தொழிலில் முன்னேற்றம் காணலாம். ஜன்மச் சனியின் காலமிது என்பதால், அதிகம் உழைக்க வேண்டி வரும். அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 10, 11, 15.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகை நிறம், பச்சை, இளநீலம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: அனுமன் சாலீசா படிப்பதும், கேட்பதும் நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
சூரியன், குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். 12 ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். 14 ம் தேதி முதல் நிலபுலங்கள் சேரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் அதிக நன்மைகள் உண்டாகும். சுகமும் சந்தோஷமும் பெருகும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் நலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று கூடும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செலவு செய்வது அவசியம். உடன் பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 10, 11, 15.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், கருப்பு.
எண்கள்:1, 3, 6, 7.
பரிகாரம்: சுப்பிரமணியர், ஆஞ்சநேயரை வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே
செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். இரும்பு, எஃகு, எண்ணெய் தொழிலில் லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். 12 ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைபடும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. 14 ம் தேதி முதல் அரசுப் பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும். நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். ஜலப் பொருட்கள் லாபம் தரும். 8 ல் குருவும் ராகுவும் உலவுவதால் பயணத்தின்போது விழிப்பு தேவை. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் தங்களது கடமைகளைச் சரிவர ஆற்றிவருவது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 10, 11, 15.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, பச்சை.
எண்கள்: 5, 6, 8, 9.
பரிகாரம்: குரு, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 7 ல் குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பு. குடும்ப நலம் சீராக இருந்து வரும். சுபகாரியங்கள் நிகழும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். இயந்திரப் பணியாளருக்கு லாபம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அடங்குவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடி வரும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். பெண்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். 12-ம் தேதி முதல் வியாபாரிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். மாணவர்களது திறமை வெளிப்படும். 14-ம் தேதி முதல் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு விலகும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதி: மார்ச் 10, 11, 15.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: நீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 6, 8, 9.
பரிகாரம் : சரபேஸ்வரரை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. உடல் நலனில் கவனம் செலுத்துவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் குறையும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் தேவை. அரசு பணியாளர்கள், அரசியல்வாதிகள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தந்தையாலும் பிள்ளைகளாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரிகள் அகலகால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். பணம் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கைத் தேவை. கலைஞர்கள், பெண்களுக்கு ஓரளவு நலம் உண்டாகும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் லாபம் தரும். அந்நியர்களின் தொடர்பு பயன்படும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ளவும். அதனால் பயன்பெறவும் சந்தர்ப்பம் உருவாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 10, 11, 15.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: பெரியவர்கள், குருஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி ஆசி பெறுவது நல்லது.