ரமலான் மாதச் சிறப்புக் கட்டுரை: நூறு தானியமணிகள் உருவாகட்டும்

ரமலான் மாதச் சிறப்புக் கட்டுரை: நூறு தானியமணிகள் உருவாகட்டும்
Updated on
1 min read

ஆத்மாவைக் கவ்வியுள்ள உலகாசை என்னும் இருள் விலக வேண்டும் என்றால், மனிதன் அறப்பணிகளில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திச் செலவு செய்ய வேண்டும். தேவையுள்ளோர் துயர் துடைக்கப் பாடுபட வேண்டும். அதை உள்ளத்தில் ஆழமாகப் பதிக்கும் மாதம் ரமலான் மாதமாகும்.

கஞ்சன் என்னதான் தொழுதாலும், எத்தனை நாள் பசித்திருந்து நோன்பு நோற்றாலும், விழித்திருந்து திருமறையை ஓதினாலும், அவனுடைய ஆத்மாவின் இருள் விலகாது.

செல்வந்தர்கள் ‘ஜகாத்’ என்னும் சமூக நலநிதியைத் சரியாக அதற்கான உச்சவரம்பைக் கணக்கிட்டுத் தர வேண்டும். அதன் வரம்புக்கு உட்படாதவரோ முடிந்த அளவு தான, தர்மங்களில் ஈடுபட வேண்டும்.

“இறைவன் தன் அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியுள்ளவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ, அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்ததெல்லாம், மறுமை நாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்பட்டு அவர்களின் பேரழிவுக்குக் காரணமாகிவிடும்” என்று எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.

தேவையுள்ளோருக்குச் செல்வத்தைச் செலவு செய்வதில் இறை நம்பிக்கையாளனின் பண்பு உலக விரும்பிகளைவிட மாறுபாடானது.

உலக விரும்பி, அறப்பணிகளில் செலவு செய்தால் தனது செல்வம் குறைந்துவிடும் என்று அஞ்சுகிறான். இறை நம்பிக்கை கொண்டவனோ அப்படிப்பட்ட செலவை இறைவனிடத்தில் தனது நாளைய சேமிப்பாகக் கருதி அப்பணிகளை மனம் மகிழ்ந்து செய்கின்றான்.

பயிரிடப்படும் ஒரு தானிய விதை, ஏழு கதிர்களாக முளைத்து ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியமணிகள் உருவாகும் உவமானம் அது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in