வார ராசிபலன் 13-11-2014 முதல் 19-11-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

வார ராசிபலன் 13-11-2014 முதல் 19-11-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)
Updated on
3 min read

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 8-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. புதியவர்களது தொடர்பால் நலம் பெறுவீர்கள். ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உண்டாகும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள் வாங்குவீர்கள்.

7-ல் சூரியன், புதன், சனி உலவுவதால் பங்குதாரர்களாலும், வாழ்க்கைத்துணையாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். 17-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கும். அரசுப் பணிகளில் எச்சரிக்கை தேவை. தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். தீய எண்ணங்களுக்கு இடம் தர வேண்டாம். நேரான வழியில் செயல்படுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17, 19 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், கறுப்பு, வான் நீலம்.

எண்கள்: 4, 6, 9.

பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன், சனியும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். கற்பனை ஆற்றல் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களின் நிலை உயரும். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். காடு, மலைகளில் சுற்றித் திரிய ஆசைப்படுவீர்கள். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை எண்ணி ஏமாற வேண்டாம்.

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. 17-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. நிலபுலங்கள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும் போதும் பாதுகாப்புத் தேவை. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வாழ்க்கைத்துணை நலனிலும் அக்கறை தேவைப்படும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17, 19 (பிற்பகல்).

திசைகள்: வடமேற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, நீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 7, 8.

பரிகாரம்: குரு, ராகு, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது. துர்கையம்மனை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 10-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்ப நலம் சிறக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆசிரியர்கள், சட்ட வல்லுனர்கள், மேடைப் பேச்சாளர்களின் மதிப்பு உயரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். அலைச்சல் கூடும். ஆனால், அதற்கான பலன் கிடைக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

நல்ல தகவல் வந்து சேரும். சுக்கிரன் 6-லும், செவ்வாய் 7-லும் இருப்பதால் வாழ்க்கைத் துணையால் சங்கடம் ஏற்படும். பெண்களுக்குப் பிரச்சினைகள் சூழும். கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 17-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். மருத்துவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும்.மேலதிகாரிகள், குடும்பப்பெரியவர்களால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17, 19 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, வடமேற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பச்சை, பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 3, 5, 7.

பரிகாரம்: சுக்கிரன், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. சக்தி வழிபாடு நலம் தரும்.

கடக ராசி நேயர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 4-ல் புதன், 5-ல் சுக்கிரன், 6-ல் செவ்வாய் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். குடும்பத்தில் அமைதி காணலாம். பண வரவு சற்று அதிகரிக்கும். புதியவர்களது நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். சிறுசிறு பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்.

ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களது நிலை உயரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் குருவின் பார்வையைப் பெறுவதால் பிள்ளைகளால் நலம் உண்டாகும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17, 19 (பிற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: புகை நிறம், பச்சை, இளநீலம், சிவப்பு.

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: சூரியனுக்கும் சனிக்கும் பிரீதி, பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது. தந்தைக்கும் தந்தை வழி உறவினருக்கும் உதவவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சனியும், 4-ல் சுக்கிரனும் உலவுவதால் சுப காரியங்களுக்காகவும், வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும் செலவு செய்வீர்கள். நீண்ட தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். தொழிலாளர்களது கோரிக்கைகளில் சில இப்போது நிறைவேறும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களின் நிலை உயரும். புதிய பதவி, பட்டங்கள் இப்போது கிடைக்கும்.

வாரப் பின்பகுதியில் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. புதியவர்களிடம் எச்சரிக்கைத் தேவை. 17-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. சுகம் குறையும். அலைச்சல் கூடும். என்றாலும் சூரியனை குரு பார்ப்பதால் முக்கியஸ்தர்களின் தொடர்பால் நலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைப்படும். தொழிலதிபர்கள் அகலக்கால் வைக்க வேண்டாம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17, 19 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 1, 6, 8, 9.

பரிகாரம்: ராகு, கேது, புதன், குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. துர்கா கவசம்

படிக்கவும். வேத விற்பன்னர்களுக்கு உதவவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சுக்கிரன், 11-ல் குரு உலவுவது சிறப்பு. பொருள் வரவு கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கடல் வாணிபம் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். தனவந்தரின் சகாயம் கிடைக்கும். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும்.

குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மேடைப் பேச்சாளர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். 2-ல் சூரியனும் சனியும் உலவுவதால் கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஜன்ம ராசியில் ராகுவும், 4-ல் செவ்வாயும் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. 17-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும். தந்தையால் நலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: நவம்பர் 13, 17 (பிற்பகல்), 19 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன், செவ்வாய், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. துர்கை, விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in