ஜென் கதை - உங்கள் இயல்பில் கோபம் இல்லை

ஜென் கதை - உங்கள் இயல்பில் கோபம் இல்லை
Updated on
1 min read

ஒரு சீடன் தன் குரு பாங்கய்யிடம் கேட்டான். “ என்னால் எனது கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே இயலவில்லை.”

குரு அவனிடம், “ உனது கோபம் எங்கே? எனக்குக் கொஞ்சம் காட்டு” என்றார். சீடன் ஆச்சரியப்பட்டான். “இப்போதைக்கு என்னிடம் கோபம் இல்லை, அதனால் என்னால் அதைக் காட்ட முடியாது” என்றான்.

குரு பாங்கய் பதில் அளித்தார். “பிரச்னை ஒன்றும் இல்லை. கோபம் வரும்போது என்னிடம் கொண்டுவந்து காட்டு” என்றார். சீடன் கடுப்புடன், “கோபம் வந்தவுடன் என்னால் கொண்டுவந்து உடனடியாகக் காட்ட முடியாதே” என்றான். அத்துடன், “எதிர்பாராத வேளையில் கோபம் வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள் நிச்சயமாக மறைந்தே போய்விடும்” என்றான் சீடன்.

“அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு.

“கோபம் உனது உண்மையான இயல்பாக இருக்கும் எனில் எந்தச் சமயத்திலும் என்னிடம் அதைக் கொண்டுவந்து காட்ட முடியும். நீ பிறக்கும்போது உன்னிடம் அது இல்லை. உனது பெற்றோரும் உன்னிடம் தரவில்லை. அதனால் அது வெளியிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ அதை ஒரு குச்சியால் அடித்து விரட்டு” என்றார் குரு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in